சென்னை: புதுப்பிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுத் தேர்வுகளில் உள்நுழையும் கறுப்பு ஆடுகள் விரைவில் களையப்படும் எனக் கூறினார்.
சென்னை பாரிமுனைச் சந்திப்பு அருகேயுள்ள புதுப்பிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையை தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்துவைத்தார்.
குடும்ப ஓய்வூதியம் முதல் மனைவிக்கா, 2ஆவது மனைவிக்கா? - நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன தெரியுமா?
அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இதேபோல உள்ள அதிவிரைவு தொடர்வண்டிச் செல்லும் பகுதிக்கு அடியிலுள்ள சுரங்கப் பாதைகளில், சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் குறைகளை நீக்கி புதுப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தவர், அரசுத் தேர்வுகளுக்கான இடைத்தரகர்கள் உள்ளிட்ட கறுப்பு ஆடுகள் விரைவில் களையப்பட்டு, எந்தத் தேர்வானாலும் முறைகேடு என்பது இல்லாத நிலை உருவாக்கப்படும் எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
பயணி தவறவிட்ட நகையைத் தேடி, ஒப்படைத்த அரசுப் பேருந்து ஊழியர்கள்
தொடர்ந்து, அரசுத் தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக யார் புகார் தெரிவித்தாலும் அது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
ஊழலின் மொத்த உருவம் திமுகதான் எனவும், தமிழர்களின் தன்மானத்தை கெடுத்தவர்கள் அவர்கள்தான் எனவும் சாடிய ஜெயக்குமார், முதலமைச்சரை குறைகூற அவர்களுக்கு அருகதை இல்லை எனத் தெரிவித்தார்.