சென்னை: ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான "ஃபிங்கர்டிப்" இணையத் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் தற்போது இரண்டாவது சீசனை எடுத்துள்ளனர். இந்த இரண்டாவது சீசன் ஜூன் 17-ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த இணையத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபிங்கர்டிப் இரண்டாவது சீசன் ஒரு க்ரைம் த்ரில்லர். டிஜிட்டல் உலகின் ஆபத்துகளை இந்தக் கதை ஆராய்கிறது. ஃபிங்கர்டிப் இரண்டாவது சீசனை ஷிவாவகர் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார், Film Crew Productions சார்பில் அருண் குமார் மற்றும் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இதையும் படிங்க: லெஜண்ட் திரைப்பட நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்