ETV Bharat / city

மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் தொய்வு ஏற்படுத்தியவர்களுக்கு ரூ.75,000 அபராதம் - சென்னை மாநகராட்சி - மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் தொய்வு ரூ 75 000 அபராதம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய 3 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் திட்டப்பணி
மழைநீர் வடிகால் திட்டப்பணி
author img

By

Published : Jun 14, 2022, 7:24 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப்பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் வேம்புலி அம்மன் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை, ரங்கையா சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பணியினை முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய 3 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பணிகளில் தொய்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: 'ஸ்கூலுக்கு செல்போன் கொண்டுவரக்கூடாது, மீறி கொண்டுவந்தால் பறிமுதல் தான்' - அதிரடி காட்டிய அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.