கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த கடந்த 139 நாள்களில் காவல் துறை தடையை மீறியதாக ஒன்பது லட்சத்து 53 ஆயிரத்து 914 பேரை இது வரை காவல்துறை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது.
அதேபோல் ஆறு லட்சத்து 73 ஆயிரத்து 806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 20 கோடியே ஆறு லட்சத்து 25 ஆயிரத்து 243 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 78 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து