சென்னை: கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில், ரேஷன் அட்டையில் குடும்ப தலைவி என்ற பெயர் இருந்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் உரிமைத்தொகை வழங்கப்படும் என வதந்தி கிளம்பிய நிலையில் அது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.
“மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் ஒரே நோக்கம். ரேஷன் அட்டையில் குடும்ப தலைவர்கள் தங்களது பெயரை மாற்ற தேவையில்லை.
இது குறித்து பொதுமக்கள் எவ்வித குழப்பமும் அடைய தேவையில்லை, உரிய நேரத்தில் பயனாளர்களை கண்டறிந்து திட்டம் தொடங்கப்படும்” என அறிவித்தார்.
இதையும் படிங்க: 'வெள்ளை அறிக்கை பெயரில் வெற்று அறிக்கை' - ஓபிஎஸ்-ஈபிஎஸ் காட்டம்