ETV Bharat / city

மின்சார தட்டுப்பாடு தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - நிர்மலா சீதாராமன்

மின்சார தட்டுப்பாடு தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

நிர்மலா
மின்சார தட்டுப்பாடு தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
author img

By

Published : May 11, 2022, 6:45 AM IST

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே சீபா(Comprehensive economic partnership agreement) எனும் ஒப்பந்தமும், இந்தியா ஆஸ்திரேலியா இடையே E.C.T.A (economic cooperation and trade agreement) எனும் ஒப்பந்தமும் அண்மையில் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தங்கள் குறித்து தமிழ்நாடு ஏற்றுமதியாளர்களுக்கு விளக்கும் விதமாக கிண்டி ஐடிசி சோழாவில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில குறு சிறு தொழில்துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், "ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 75 பில்லியன் டாலர் முதலீடு இப்போது வந்ததல்ல. நான்கு வருடங்களுக்கு முன்பு நம் பிரதமர் அங்கு சென்றபோதே, எங்கு முதலீடு செய்யவேண்டும் என சொல்லுங்கள். நாங்கள் செய்கிறோம் என அங்குள்ள ராயல் குடும்பத்தினர் அப்போதே சொன்னார்கள். இந்த 75 பில்லியன் மட்டுமல்லாமல், பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான சந்தைகளும் இந்தியாவில் திறக்கப்படுகின்றன. எனவே, ஜாயிண்ட் வென்சர்களை தொடங்குங்கள்.

மின்சார தட்டுப்பாடு தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

தோல் பொருட்கள் மட்டுமில்லாமல் துணி மற்றும் சிப் உற்பத்தியிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். மருத்துவ பொருட்கள் உற்பத்தித் துறையில் அவற்றை உருவாக்கத் தேவையான துணை பொருட்களின் உற்பத்தியை நாம் கைவிட்டதன் காரணமாக, இப்போது மருந்துப் பொருட்களை உருவாக்க வேறு நாடுகளுக்காக காத்திருக்கிறோம். எலெக்ட்ரிக் பொருட்கள் முழுமையாக இந்தியாவில் உருவாக்கினாலும் செமி கண்டக்டர் சிப்களுக்காக, வேறு நாடு அனுப்பும் வரை காத்திருக்கும் சூழல் உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்றுமதி மையங்களை ஆறு இடங்களில் உருவாக்குவதாக அமைச்சர் சொன்னார். இதற்குத் தேவையான உள்கட்டமைபு வசதிகளை உருவாக்கத் தேவை என்னவென்று சொல்லுங்கள். மத்திய அரசு கண்டிப்பாக செய்யும். கரோனாவிற்கு பிறகு தொழில்துறையில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

Work from home வந்த பிறகு Formal ஆடைகள் விற்பனை குறைந்து, casual ஆடை விற்பனை அதிகரித்துள்ளதாக ஆடைத் தொழிலாளார்கள் கூறுகின்றனர். இதுபோன்ற ரசனை மாறுபாட்டு விசயங்களை ஏற்றுமதியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

chip உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவிலேயே உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ மொபல் துறையில் மூலப்பொருட்கள் இறக்குமதியில் ஏற்பட்ட பாதிப்பு அத்தொழில்துறையையே பாதித்துள்ளது. மூலப் பொருட்கள் உற்பத்தி செய்வோரை, இந்தியாவில் தொழில் தொடங்க வைக்க வேண்டும்.

தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த முறையில் அனைத்து மாநிலங்களிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மின்சார பற்றாக்குறை தொழில் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். குறைந்த விலையில், 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஷ்யா - உக்ரைன் போரால் இந்தியாவிற்கு சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த நாடுகள் ஏற்றுமதி செய்த நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்த ஏற்றுமதியாளர்களுக்கு தயாராக இருக்க வேண்டும், அதற்கான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: இலங்கையில் கண்டதும் சுட உத்தரவு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.