சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலை உணா்வுகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
பலதரப்பட்டத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும், பிற திரைப்படத் துணைப்பாடங்களையும் கற்றுத் தருகிறது. இந்த நிறுவனத்திற்கு தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்துவந்தது.
இந்த நிலையில் மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்திற்கு திரைப்பட நடிகர் ராஜேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத்தொர்ந்து ராஜேஷ் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையும் படிங்க: சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி தொடக்கம்