கரோனா பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. ஆனால் இந்த உத்தரவுகளை மீறி பொதுமக்கள் பலர் ஒன்று கூடியும், வாகனங்களில் வெளியே சுற்றியும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் சுற்றித் திரிகின்றனர். இதனால் காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை 144 தடை உத்தரவை மீறியதற்காக 57,302 பேர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும், விதிகளை மீறி வாகனத்தில் சுற்றியதற்காக 65,101 வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ஆறு லட்சத்து 82 ஆயிரத்து 795 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.