ETV Bharat / city

சென்னையில் குறைந்த அளவே திரையரங்குகள் திறப்பு! - Chennai Theatre

தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில், இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இருப்பினும் சென்னையில் குறைந்த அளவே திரையரங்குகள் திறக்கப்பட்டன.

சென்னையில் குறைந்த அளவே திரையரங்குகள் திறப்பு

author img

By

Published : Aug 23, 2021, 6:49 PM IST

Updated : Aug 23, 2021, 7:36 PM IST

சென்னை: திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தபோதும் சென்னையில் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பரவத்தொடங்கியது. இதனால், தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டது. மேலும், அனைத்துத் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன.

50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களுக்கு அனுமதி

சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டன. ஜூன் மாத இறுதியில் கரோனா படிப்படியாக குறையத்தொடங்கியது. மெல்ல மெல்ல ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, ஒரு சில நிறுவனங்கள் திறக்கப்பட்டன.

சினிமா படப்பிடிப்புகளும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக. 21) தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்றும்; 50 விழுக்காட்டுப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

சென்னையில் குறைந்த அளவே திரையரங்குகள் திறப்பு

பரிசோதனைக்குப் பின் அனுமதி

இந்நிலையில், இன்று (ஆக. 23) சென்னையிலுள்ள பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை. ஏஜிஎஸ், கமலா திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டன. குறிப்பாக கமலா திரையரங்கில் அரங்கு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு 50 விழுக்காட்டுப் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பார்வையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பார்க்கப்பட்டு, முகக்கவசம் அணிந்துள்ளார்களா? எனவும் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், இன்று முதல்நாள் என்பதால் சந்தானத்தின் 'பாரீஸ் ஜெயராஜ்', ஹாலிவுட் படமான காட்ஸில்லா vs காங் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. வெள்ளிக்கிழமை முதல் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

திரையரங்கில் 100% கொண்டாட்டம்

திரையரங்கு திறக்கப்பட்டது குறித்து லிங்கா என்ற ரசிகர் கூறியதாவது, "நான்கு மாதங்களுக்குப்பின் திரையரங்குகள் திறக்கப்பட்டதில் மகிழ்ச்சி. கடந்த நான்கு மாதங்களாக வீட்டிலேயே முடங்கி இருந்தோம்.

திரையரங்குகளில் படங்களைப் பார்க்கவே விருப்பம். டிவி, ஓடிடி போன்றவற்றில் படம் பார்த்தாலும் திரையரங்குகளில் சென்று பார்ப்பதுபோல் மகிழ்ச்சி கிடைப்பதில்லை" என்றார்.

மேலும், பால்கி என்ற மற்றொரு ரசிகர் கூறியதாவது, "திரையரங்குகளில் படம் பார்க்கும்போது வரும் மனநிறைவு ஓடிடியில் அல்லது டிவியில் பார்க்கும்போது வராது. திரையரங்குகள்தான் எப்போதும் மாஸ். திரையரங்குகளில்தான் 100 விழுக்காடு கொண்டாட்டத்தை உணரமுடியும்" என்றார்.

திரையரங்குகள் திறப்பு குறித்து கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல் கூறியதாவது, "திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நாங்கள்தான் முதலில் பதிவு தொடங்கி திரையரங்குகளைத் திறந்துள்ளோம்.

அரசு வழிமுறைகளின்படி...

ரசிகர்களின் சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம். வரும் வாரங்களில் நிறைய புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. பாரம்பரியமிக்க இந்தத் திரையரங்கம் மக்களை மகிழ்விக்கவே உள்ளது.

அதுவே, எங்களது தேவையும். அரசு அளித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்துள்ளோம். இன்று குறைந்த அளவே ரசிகர்கள் வந்தாலும் இன்றுதான் திறக்கப்பட்டுள்ளதால், இதுவே எங்களுக்கு மகிழ்ச்சி.

திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் அரண்மனை - 3, சிவகுமாரின் சபதம், பிளான் பண்ணி பண்ணனும், கோடியில் ஒருவன் உள்ளிட்டப் படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளன. மேலும், ஓடிடி வசம் சென்ற படங்களும் திரையரங்குகளை நோக்கி வர யோசித்து வருகின்றன" என்றார்.

இதையும் படிங்க: '100 சதவீத இட ஒதுக்கீடு - அமைச்சர் மா. சுப்பிரமணியன்'

Last Updated : Aug 23, 2021, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.