பிரபல ஹாலிவுட் நடிகை ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் " நாக பைரவா " படத்தை வடிவுடையான் இயக்குகிறார். ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரித்துள்ள பான் இந்தியா படமான பாம்பாட்டம் படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தற்போது V.C.வடிவுடையான் இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெரின் கான் இரட்டை வேடங்களில் நடிக்கும்" நாக பைரவ " படத்தை பான் இந்தியா படமாக தயாரிக்கிறார்.
இணை தயாரிப்பு - பண்ணை A.இளங்கோவன் தயாரிப்பு - V.பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், எழுதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குகிறார் V.C.வடிவுடையான். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் "Super Tax Payer" நடிகர் ரஜினிகாந்த்