சென்னை: தனியார் தொண்டு அமைப்பு ஒன்றின் நிறுவனரும், அதன் நிர்வாக இயக்குனருமான நளினா ராமலட்சுமி இன்று (நவ. 15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "கரோனா தொற்றினால், டிஜிட்டல் பயன்பாடு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரும் பெரிதும் அதிகரித்தது. ஆனால் தற்பொழுது டிஜிட்டல் பயன்பாடு குறைந்துள ஆனாலும் குடும்பங்களில் கேட்ஜெட்கள் அவசியமான ஒன்றாக மாறி உள்ளது.
உலக குழந்தைகள் தினமான (World Children's Day) நவம்பர் 20ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரையில் கேட்ஜெட்ப்ரீ ஹவர் (Gadget Free Hour) இயக்கத்தினை எங்கள் நடத்துகிறது. பெற்றோர் அந்த ஒரு மணி நேரம் தங்களின் அனைத்து டிஜிட்டல் பயன்பாடுகளையும் தவிர்த்துவிட்டு, குழந்தைகளுடன் கொண்டாட வேண்டும்.
கல்வித்துறை ஆதரவு
அப்போது குழந்தைகளுடன் விளையாடுவது, பேசுவது, சாப்பிடுவது போன்றவற்றின் மூலம் மகிழ்ச்சியுடன் கழிக்கலாம். இதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையும் ஆதரவை அளித்துள்ளது.
மேலும் பல்வேறு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர் உள்ளிட்ட பலரும் கேட்ஜெட் இல்லாமல் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், கரோனா தொற்று காலத்தில் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் இருந்தாலும், ஒவ்வொரு வகையில் பிரிந்துதான் இருந்தனர் என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர். எனவே, உலக குழந்தைகள் தினத்தில் கேட்ஜெட்களை ஒரு மணிநேரம் ஒதுக்கிவைத்து விட்டு குழந்தைகளுடன் செலவிடுங்கள் எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆன்லைன் தேர்வு வேண்டும் - மாணவர்கள் போர்க்கொடி!