ETV Bharat / city

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பொய்ப்புகார்?

தன் மீது பொய்ப்புகார் அளித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பொய் புகார்?

author img

By

Published : Jun 15, 2022, 5:44 PM IST

சென்னை:கடந்த 2011-2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்தவர், நத்தம் விஸ்வநாதன். இவர் வேலை வாங்கித்தருவதாக 27 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாக அதிமுக மீனவரணி வடசென்னை மாவட்ட பொருளாளர் கந்தசாமி என்பவர், சில நாட்களுக்கு முன்பு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்கூட அல்லாத கந்தசாமி தன் மீது பொய்ப்புகார் கொடுத்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சார்பில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாபு முருகவேல், ’அதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத கந்தசாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது பொய்ப் புகார் அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் கந்தசாமி இதே போல பல முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்ப்புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதாக’ அவர் கூறினார்.

மேலும் கந்தசாமி பல பேரிடம் வேலை வாங்கித்தருவதாகப் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டு, அவர்களிடம் காலம் தாழ்த்துவதற்காக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்ப் புகார்கள் சுமத்தி வருவதாக பாபு முருகவேல் கூறினார். ’பொய்ப்புகார் அளித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட கந்தசாமி மீது கிரிமினல் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வழக்கறிஞர் பாபு முருகவேல் கூறினார்.

இதையும் படிங்க:"விஜய் ஒரு குழந்தை அவருக்கு ஒன்றும் தெரியாது" - சொல்கிறார் பாஜகவின் கருநாகராஜன்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.