ETV Bharat / city

மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு! - Self Financing Medical Colleges

மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான விண்ணப்ப காலம் அக்.3-லிருந்து அக்.6ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 3, 2022, 6:30 PM IST

சென்னை: 2022-2023ஆம் ஆண்டின் மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவம் (பிடிஎஸ்) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்தது.

அதன்படி, அக்.3ஆம் தேதி மாலை 5 மணி வரையில் 38 ஆயிரத்து 912 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 34 ஆயிரத்து 348 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். அதில், அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு 21 ஆயிரத்து 659 மாணவர்களும், சுயநிதி மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு 12,689 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு அக்.6ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என நாட்கள் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 8225 இடங்களிலும், 7.5% இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப்பள்ளி மாணவர்கள் இடங்கள் 455 இடங்களிலும், பல் மருத்துவப்படிப்பில் 2160 இடங்களிலும், 7.5% இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப்பள்ளி இடங்களிலும் மாணவர்கள் 114 பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரியில் 5050 இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐசி கல்லூரியில் 125 இடங்களும், 20 சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 3050 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் 848 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 1290 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளது.

பல் மருத்துவப்படிப்பில் 2 அரசு மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களும், 20 சுயநிதி பல் மருத்துவக்கல்லூரியில் 1960 இடங்களும் என 2160 இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டின் மூலம் நிரப்பப்பட உள்ளது. அவற்றில் 605 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும், 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் அளிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.