அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கு வெளிமாநில மாணவர்கள் இன்று (செப்டம்பர் 3) வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
எனினும், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் செப். 30ஆம் தேதி மாலை 5.30 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\
அதில், வெளிமாநில மாணவர்கள் https://www.annauniv.edu/otherstate2020/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதில் அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு 044-2235 8314 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.