2ஆம் கட்ட தடுப்பூசி திட்டம் - இன்று முதல் பதிவு செய்யலாம்!
மார்ச் 1ஆம் தேதியிலிருந்து 2ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. மூத்த குடிமக்கள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும் 45+ வயதினர் தடுப்பூசிக்காக கோ-வின் (Co-WIN), ஆரோக்கிய சேது செயலி மூலம் காலை 9 மணி முதல் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆலோசனை !
சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
பொது முடக்கம் இன்று முதல் மீண்டும் நீட்டிப்பு!
மீண்டும் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்து.
திமுக தொகுதிப் பங்கீடு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சியான திமுகவின் தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை? இன்று முடிவை அறிவிப்பாரா ஜோ பைடன்
சவூதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.