வேளாண்மை திட்டங்கள் தொடங்கிவைப்பு:
ஒருலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண்மை உட்கட்டமைப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக.09) தொடங்கி வைக்க உள்ளார்.
![பிரதமர் நரேந்திர மோடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8349867_modi1.jpg)
பாஜக சார்பில் வேல் பூஜை:
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் அவதூறாகப் பேசி கொச்சைப்படுத்தியவர்களைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் இன்று வேல் பூஜை நடத்தப்படுகிறது.
![தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8349867_murugan2.jpg)
தளர்வு இல்லாத ஊரடங்கு:
தமிழ்நாடு முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் எட்டாவது முறையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.
![தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8349867_lock3.jpg)
விமான போக்குவரத்து தொடக்கம்:
பாகிஸ்தானில் சர்வதேச விமான போக்குவரத்து இன்று முதல் தொடங்க இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
![பாகிஸ்தான் விமான சேவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8349867_pak5.jpg)
ராஜபக்சே பதவியேற்பு:
நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றதையடுத்து, இலங்கை பிரதமராக, மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்கிறார்.
![மகிந்த ராஜபக்சே](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8349867_pac4.jpg)