1. மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் மறைவு - முதலமைச்சர் இரங்கல்
மூத்த பத்திரிகையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
2."குடியரசுத்தலைவர் கையால் விருது வாங்குவதே என் லட்சியம்' - 23 வயது இளம் ஊராட்சி மன்றத்தலைவர் சபதம்!
குடியரசுத்தலைவர் கையில் சொந்த கிராமத்திற்கு விருது வாங்கி கொடுப்பதே எனது லட்சியம் என இளம் ஊராட்சிமன்றத் தலைவராக பொறுப்பேற்க உள்ள பொறியியல் பட்டதாரி பெண் தெரிவித்துள்ளார்.
3. ’நாட்டில் நல்லிணக்கம், வளம், நல்ல உடல் நலம் பெருகட்டும்’ -ஆளுநர் ஆயுத பூஜை வாழ்த்து
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
4. 'புன்னகை மன்னன்' படப்புகழ் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு; ஆர்ப்பரித்து கொட்டும் அருவி!
'புன்னகை மன்னன்' படம் எடுக்கப்பட்ட அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
5. அதிர்ச்சித் தகவல்: 21 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை!
பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான 3 கட்டக் கலந்தாய்வு நடத்து முடிந்துள்ள நிலையில், 21 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை எனவும், கலந்தாய்வின் முடிவில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கலாம் என கல்வியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
6. படுதோல்வியை பரிசளித்த வாக்காளர்கள் - உள்ளாட்சி தேர்தல் குறித்து கே.எஸ். அழகிரி!
உள்ளாட்சித் தேர்தலில் ம.நீ.ம., நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளுக்கு மக்கள் படுதோல்வியை பரிசளித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
7. இனி இவர்களுக்கு ரேஷன் கிடையாது? அரசு விளக்கம்
ஐந்து ஏக்கர்களுக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரேஷன் பொருள்கள் இல்லை என்று வெளிவரும் செய்திகள் குறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.
8. நீட் தேர்வு விலக்கு: ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி!
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி நேரில் சந்தித்துபேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினின் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசால் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை நவீன் பட்நாயக்கிடம் வழங்கினார்.
9. இந்தியில் ’அலா வைகுந்தபுரமுலோ’: படப்பிடிப்பு தொடக்கம்
அல்லு அர்ஜுனின் ’அலா வைகுந்தபுரமுலோ’ படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று (அக்.13) தொடங்கியுள்ளது.
10. இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாகம் - பெங்களூருவில் 'தோனி கிரிக்கெட் அகாடமி'
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எம்.எஸ் தோனி கிரிக்கெட் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது.