1.வீரப்பன்... விஜய குமார்... பட்டுக்கூடு... நடந்தது என்ன?
வீரப்பன் மறைந்தாலும், அவரது மரணத்தின் மீதான சலசலப்பு இன்னமும் ஓயவில்லை.
2.த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்: கரோனாவுக்குப் பின் பேரிடி!
கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, நிலச்சரிவினால் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு நிலவும் பாதிப்புகள், சேதாரங்கள் குறித்த காணொலித் தொகுப்பு இதோ...
3.வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்த விஜயபாஸ்கர்: எஃப்.ஐ.ஆரில் தகவல்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
4.'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் - முதலமைச்சருடன் அன்பில் மகேஷ் ஆலோசனை
1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க, இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
5.அசைவ, மதுப்பிரியர்களுக்காக மெகா தடுப்பூசி முகாம் நாள் மாற்றியமைப்பு
அசைவப்பிரியர்கள், மதுப்பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருப்பதால் சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
6.இது என்னய்யா சிம்புவுக்கு வந்த சோதனை: மாநாடு ரிலீஸில் புதிய சிக்கல்!
நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் நானியின் 'ஷியாம் சிங்கா ராய்'
நானி நடிப்பில் உருவாகியுள்ள 'ஷியாம் சிங்கா ராய்' திரைப்படம் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
8.சினிமா பாணியில் சிலை கடத்தல்: 7 பேர் கைது
சென்னை அடுத்த மேல்மருவத்தூர் பகுதியில் சிலை கடத்தலில் ஈடுபட்டுவந்த ஏழு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
9.முகக்கவச தொழிற்சாலையில் தீ விபத்து: இருவர் உயிரிழப்பு
சூரத் அருகே முகக்கவச தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 125 பேர் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
10.'வரலாற்று ஆவணங்களை ஏலம்விடுவது தேசத் துரோகம்!'
வரலாற்று ஆவணங்களை ஏலம்விடப் போவதாக அறிவித்துள்ள பிரசார் பாரதியின் முடிவு தேசத் துரோகம், இதனை உடனடியாகக் கைவிட வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.