ETV Bharat / city

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1Pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm
author img

By

Published : Aug 3, 2021, 1:06 PM IST

வெளியாகிய சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின.

மூட நம்பிக்கை: கிரேனிலிருந்து விழுந்த பக்தர்

கிருஷ்ணகிரி: ஆடி கிருத்திகை பண்டிகையையொட்டி நேர்த்திக்கடன் செலுத்த 40 அடி உயரத்தில் கிரேனில் அலகு குத்தி சென்ற இளைஞர் திடீரென கீழே விழுந்து காயங்களுடன் தப்பினார்.

தமிழை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு - வைகோ குற்றச்சாட்டு

சமஸ்கிருதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட, தமிழுக்கு கொடுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு

பெரம்பலூர் நகராட்சி லப்பைக்குடிகாடு, அரும்பாவூர் பேரூராட்சிகளில் வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலை நினைவு தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

தீரன் சின்னமலை 216 ஆம் நினைவு நாளான இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கிரீமிலேயர் வரம்பில் வேளாண் வருமானத்திற்கு விலக்கு - ராமதாஸ்

கிரீமிலேயர் வரம்பை நிர்ணயிப்பதில் வேளாண் வருமானம், ஊதியம் சேர்க்கப்படாது என ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெகாசஸ் விவகாரம் - ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பிரதமரைச் சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு: தீவிரப் பரப்புரையில் டெல்லி பாஜக

பிரதமர் மோடியின் நமோ (NaMo) செயலியை 5,100 பேரை பதிவிறக்கம் செய்யவைக்கும் டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர்கள், கட்சியினருக்குப் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா தெரிவித்தார்.

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியில் விபத்துக்குள்ளானது. ரஞ்சித் சாகர் அணை அருகே இந்த விபத்து நடைபெற்றதாகவும், சம்பவ இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஆக. 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 36,264-க்கு விற்பனையாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.