ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

etv bharat top ten news nine am
etv bharat top ten news nine am
author img

By

Published : Aug 1, 2021, 9:16 AM IST

உஷார் மக்களே - தொடர்ந்து 3ஆவது நாளாக அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தஞ்சை பெரிய கோயில்: கரோனா தடுப்பு விதி பின்பற்றலில் அலட்சியம்

தஞ்சை பெரிய கோயிலில் கரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டுவரும் கோயில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடன் பிரச்னை - அதிமுக ஊராட்சித் தலைவர் தற்கொலை

திருவாரூர் அருகே அதிமுக ஊராட்சித் தலைவர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அட்டைதாரர்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா?

புதிய அட்டைதாரர்கள் எப்போது நியாய விலைக்கடைகளில் பொருள்கள் வாங்கலாம் என்பது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் மது அருந்த சென்ற இளைஞர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி அருகே நண்பர்களுடன் மது அருந்த சென்ற இளைஞர் கோமுகி ஆற்றின் நீர் குட்டையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை அடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு அலுவலர்களுக்கு பணித்திறன் உயர்த்தும் பயிற்சிகள் - முதலமைச்சர் அறிவுறுத்தல்

அரசு அலுவலர்களின் பணித்திறன் உயர்த்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல் ஜிகா தொற்று... சுகாதாரத்துறை தகவல்!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு ஜிகா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முத்தலாக் தடை சட்டம் 2ஆம் ஆண்டு நிறைவு: ஆக.01 இனி ’இஸ்லாமிய பெண்கள் உரிமை நாள்’

முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி ’இஸ்லாமிய பெண்கள் உரிமை நாளாக’ கொண்டாடப்படும் என ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனக்கு அளிக்கப்பட்ட முடிவு மோசடியானது - மேரி கோம்

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் தனக்கு அளிக்கப்பட்ட முடிவு மோசடியானது என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை டெல்லி விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.