ETV Bharat / city

ஈடிவி பாரத் காலை 7 மணி செய்தி சுருக்கம்...Top 10 news @7am

author img

By

Published : Mar 22, 2021, 7:18 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்...

etv bharat top 10 news
ஈடிவி பாரத் காலை 7 மணி செய்தி சுருக்கம்

கோவை தெற்கு: நட்சத்திர வேட்பாளர் கமல் ஹாசன் வெல்வாரா?

கோவை: நட்சத்திர வேட்பாளர் போட்டியிடும் தொகுதியாக மாறியுள்ள கோவை தெற்குத் தொகுதியில், இரு தேசிய கட்சிகள் நேரடியாக மோதுகின்ற சூழலில் மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுவதால் வலுவான மும்முனைப் போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பரப்புரை செல்லும் இடமெல்லாம் அமைச்சர் கண்ணீர்

தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் போதெல்லாம் "உங்களின் பிரார்த்தனையால்தான் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்" என கண்ணீர் வடித்து அமைச்சர் காமராஜ் பேசிவருகிறார்.

ஜெயலலிதா இறப்பிற்கு திமுகதான் காரணமா? - உதயநிதி கேள்வி

ஜெயலலிதா இரும்புப் பெண் என பெருமையாக பேசுகின்றனர். அப்படியிருக்க, திமுக தொடர்ந்த வழக்கினால் அவர் இறந்துவிட்டாரா என்ன? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

லாக்டவுனுக்கு எதிராகப் போராட்டம்: லண்டனில் 33 பேர் கைது

மத்திய லண்டன் பகுதியில் லாக் டவுனுக்கு எதிராக போராட்டம் நடத்திய 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜப்பானை மிரட்டும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு!

டோக்கியோ: மியாகி பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதையடுத்து, சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வயதானவர்களுக்கு கல்வி போதிக்கும் தன்னார்வக் குழு!

உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டம் சிரோர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் தங்கள் அன்றாட பணிகளை முடித்த பின்னர், திறந்த வெளி பாட சாலைகளுக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். படிப்பதற்கு வயது ஒரு பொருட்டே அல்ல என்பதை சிரோர் கிராம மூதாட்டிகள் மீண்டும் உலகுக்கு உணர்த்தியுள்ளனர்.

அடடே... தோசையில் அரசியல் - கேரளாவின் புது ட்ரெண்ட்!

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள ஒரு கடையில் தோசைகளில் கட்சியின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்!

ராஜஸ்தான்: மீண்டும் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக அஜ்மீர், பில்வாரா ஆகிய ஆறு பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முத்தம் கிடைக்குமா?- ரசிகர் கேட்ட கேள்விக்கு கேஷுவலாக பதில் சொன்ன ஜான்வி

ரசிகர் ஒருவர் முத்தம் குறித்து கேட்ட கேள்விக்கு நடிகை ஜான்வி கபூர் கேஷுவலாக பதில் கூறிய விதம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IND- W vs SA- W : இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றி தென்ஆப்பிரிக்கா!

இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.