ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM - மைக்ரோ பைனான்ஸ்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM

author img

By

Published : May 14, 2021, 3:04 PM IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - முதலமைச்சரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இடைக்கால அறிக்கையை இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.

மாநகராட்சி மயானங்களில் உடல்களை எரியூட்ட லஞ்சம் பெற்றால் சஸ்பெண்ட்

சென்னை மாநகராட்சி மயானங்களில் உடல்களை எரியூட்டுவதற்கு லஞ்சம் பெறுவது தெரியவந்தால் உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்யுமாறு அலுவலர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

புயல் வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'8 இடங்களில் ஆக்ஸிஜன் சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு' - செந்தில் பாலாஜி தகவல்!

கரூர்: போர்க்கால அடிப்படையில் 8 இடங்களில் ஆக்ஸிஜன் சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அரசு வழக்குகளில் ஆஜராவதற்கு 17 வழக்கறிஞர்கள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்குகளில் ஆஜராவதற்காக 17 வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடனை திருப்பிச் செலுத்த வற்புறுத்தும் மைக்ரோ பைனான்ஸ்: அவகாசம் கேட்டுப் பெண்கள் போராட்டம்!

தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிய கடன்களுக்கான வசூலை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு ஊரடங்கு நடவடிக்கையை காவல்துறை ஏன் கடுமையாக்கவில்லை? - சிறப்புத் தொகுப்பு

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வெகு தீவிரமாகப் பரவிவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் உதாசினப்படுத்தி சாதாரணமாக வெளியில் சுற்றித்திரிவதாகக் காவல்துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அது குறித்த செய்தித் தொகுப்பு...

ரெம்டெசிவிர் கடத்தல்: நான்கு பேர் கைது!

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த விவகாரத்தில் நான்கு பேரை மயிலாப்பூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தையில் மறைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்!

ராமேஸ்வரம் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள 300க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழப்பு!

திஸ்பூர்: அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.