ETV Bharat / city

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM - top news in Tamil

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்...

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM

author img

By

Published : Jan 6, 2021, 4:55 PM IST

1.டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அலுவலர்கள் கூட்டத்தைக் கூட்ட சுகாதாரத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அலுவலர்கள் கூட்டத்தைக் கூட்டி, செயல் திட்டம் வகுக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் பரவல்: மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.ஸ்டாலின் மக்கள் கிராம சபையால் மக்களுக்கு பயன் இல்லை: முதலமைச்சர் பழனிசாமி

திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் மக்கள் கிராம சபையால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

4.103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கு: அறிவியல்பூர்வமாக விசாரணை - சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலீப்

சிபிஐயிடம் இருந்த 103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கில் அறிவியல் பூர்வமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்துவோம் என்றும் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப் தெரிவித்துள்ளார்.

5.உங்களால் ஜெயிக்க முடியுமா? ஆளுநருக்கு முதலமைச்சர் சவால்

புதுச்சேரியில் ஒரு தொகுதியில் நின்று கிரண்பேடியால் ஜெயிக்க முடியுமா? என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.

6.இந்தியாவில் அதிகரிக்கும் உருமாறிய கரோனா வைரஸ்

உருமாறிய கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

7.பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கவே விரும்புகிறோம் - விவசாயிகள் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கவே விரும்புகிறோம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

8.ஒடிசாவின் சிலிகா ஏரி: 11 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் வருகை!

சமீபத்திய கணக்கெடுப்புப்படி ஒடிசாவின் சிலிகா ஏரிக்கு 11 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் இந்த ஆண்டு வந்துள்ளன.

9.IND vs AUS: பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம்..!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என நியூ சௌத் வேல்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

10.கடவுளை அடையும் வழியில் உங்கள் பெயரும் இருக்கும் - பிறந்தநாள் வாழ்த்துகள் ரஹ்மான்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 54ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவரது ரசிகர் பட்டாளம் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.