ETV Bharat / city

1 மணி செய்தி சுருக்கம்TOP 10 NEWS @ 1 PM

author img

By

Published : Aug 19, 2021, 12:50 PM IST

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம்

etv-bharat-tamil-top-10-news
etv-bharat-tamil-top-10-news

அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டேனா? - அப்பாவு விளக்கம்

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை அவையிலிருந்து அவர்களாகத்தான் வெளியேறினார்கள் என்று அவைத்தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்தியில் பதிலளிப்பது சட்டத்திற்கு எதிரானது - ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் குட்டு

மதுரை: ஒரு மாநிலம் எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ அதே மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை 50 கோடியைக் கடந்தது

இந்தியா முழுவதும் இதுவரை 50 கோடி பேருக்கு கரோனா தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும் 36,401 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 401 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மகன் தற்கொலை செய்தியை கேட்ட தாயும் விபத்தில் பலி!

கர்நாடக மாநிலத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தாயும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்பதே முதன்மை நோக்கம்' - வெளியுறவுத் துறை அமைச்சர்

ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஆப்கனில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதே முதன்மை நோக்கம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பண மூட்டைகளுடன் தப்பி சென்றேனா? அஷ்ரப் கானி ஆதங்கம்

ஆப்கனிலிருந்து நான்கு கார்களில் பண மூட்டைகளுடன் தப்பி சென்றதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி, தான் அணிந்திருந்த உடைகள், மாற்றுத் துணி, காலணிகளுடன் மட்டுமே வெளியேறியதாக உருக்கமான ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதல்ல ட்விட்டர், இப்போ இன்ஸ்டா... சோகத்தில் கங்கனா!

நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உலகம் எங்கள் நாட்டை கைவிடக் கூடாது - ஆப்கன் அகதிகள்

உலக நாடுகள் தங்களது நாட்டு மக்களைக் கைவிடாமல், அடைக்கலம் கொடுக்க முன்வர வேண்டும் என்று டெல்லியில் வாழும் ஆப்கன் அகதிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

’வாழ்வின் தருணங்களை உறைய வைப்போம் வாருங்கள்...’ உலக புகைப்பட தினம்

நிகழ்காலத்தின் தருணங்களை உறைய வைத்து, அக்காலத்துக்கே எதிர்காலத்தில் நம்மை மீண்டும் கூட்டிச் செல்லும் விந்தையை புகைப்படங்கள் நிகழ்த்துகின்றன. இந்தப் புகைப்படங்கள் நினைவுகளை மட்டுமல்லாது, நாம் அன்று உணர்ந்த மகிழ்ச்சியையும் களிப்பையும் உடன் மீட்டுத்தருகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.