ETV Bharat / city

Malpractice: தொலைதூரக் கல்வி தேர்வு முறைகேடு - ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை

author img

By

Published : Dec 23, 2021, 4:03 PM IST

Malpractice: சென்னைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வியில் பயின்றதாக, முறைகேடு மூலம் தேர்வு எழுதாமல், சான்றிதழ் பெற முயற்சித்த 117 நபர்கள் குறித்து ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டப்படிப்பு குழு இயக்குநர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி தெரிவித்தார்.

Malpractice
தொலைதூரக் கல்வி தேர்வு முறைகேடு - ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை

சென்னை:(Malpractice): சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி, 'ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தொலை தூரக்கல்வியில் பயிலாமல் முறைகேடாகச் சான்றிதழ் பெறுவதற்கு முயற்சித்தவர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

குழுவில் யாரெல்லாம் இருப்பார்கள்?

தொலைதூரக் கல்வி மையத்தின் மூலம் 117 பேர் முறைகேடாக சான்றிதழ் பெறுவதற்கு முயற்சித்து உள்ளதாகத் தெரியவருகிறது. இதுகுறித்து ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், சென்னைப் பல்கலைக்கழக சட்டக்கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைக்கப்படும்.

இந்தக் குழுவில் மூன்று முதல் ஐந்து நபர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொலைதூரக் கல்வி தேர்வு முறைகேடு
ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றதால் இந்த முறைகேடு அரங்கேறியுள்ளது. இனிமேல், நேரடியாகத் தேர்வு நடைபெறுவதால், இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இல்லை' எனத் தெரிவித்தார்.

மேலும் சிண்டிகேட் கூட்டத்தில் கல்வியில் செயல்பாடுகள் குறித்தும் ஆராய்ச்சியினை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை பல்கலை. தேர்வில் 117 பேர் முறைகேடு: விசாரிக்கும் உயர்மட்டக் குழு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.