ETV Bharat / city

பொறியியல் துணைக் கலந்தாய்வு தர வரிசைப் பட்டியல் வெளியீடு! - engineering admission 2020

பொறியியல் துணைக் கலந்தாய்வு தர வரிசைப் பட்டியல் வெளியீடு

author img

By

Published : Nov 17, 2020, 8:20 PM IST

Updated : Nov 17, 2020, 9:35 PM IST

20:16 November 17

சென்னை: பொறியியல் படிப்பில் சேர துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று(நவ.16) வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு, "பொறியியல் படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாணவர்கள் துணைக் கலந்தாய்விற்கு நவம்பர் மூன்றாம் தேதிமுதல் ஏழாம் தேதிவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி விண்ணபித்த மாணவர்களின், சான்றிதழ்கள் நவம்பர் எட்டாம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை சரிபார்க்கப்பட்டன. அதையடுத்து இன்று (நவ. 16) அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை இன்று (நவ. 17) முதல் பதிவு செய்யலாம். அதைத்தொடர்ந்து நவ.18ஆம் தேதிமுதல் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள், மாணவர்கள் கட்டணத்தை செலுத்தி, விரும்பும் கல்லூரி, பாடப் பிரிவை தேர்வு செய்ய வேண்டும். 

அதன்பின் தற்காலிக ஒதுக்கீடு நவம்பர் 21ஆம் தேதி வெளியிடப்படும். அதனை நவ. 21, 22 ஆகிய தேதிகளில் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதனடிப்படையில் மாணவர்களுக்கான இறுதி ஒதிக்கீடு நவம்பர் 23ஆம் தேதி வெளியிடப்படும்." எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  பி.இ, பி.டெக் துணைக்கலந்தாய்வு விண்ணப்பப்பதிவு தொடங்கியது

Last Updated : Nov 17, 2020, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.