ETV Bharat / city

பொறியியல் மறுதேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகம் வெளீயிடு - வழிகாட்டு நெறிமுறைகள்

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுகளை எழுதும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஜூன் 4) வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
author img

By

Published : Jun 4, 2021, 2:38 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளில் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்களுக்கு மறு தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்வு நடைபெறும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தேர்வு நடைபெறும்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்

  • மாணவர்களுக்கான ஹால் டிக்கெட், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும். மாணவர்களும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்திலும் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • தேர்வு எழுதத் தொடங்கும் முன்பாக, மாணவர்கள் வினாத்தாளை சரிபார்த்த பின்னாக தேர்வுகளை எழுத வேண்டும். தேர்வுகளை முடித்த பின்னர் விடைத்தாள்களில் காலியாக உள்ள பக்கங்களை கோடிட்டு அடிக்க வேண்டும். தேர்வுகளை நீலம் அல்லது கறுப்பு நிற பால் பாய்ண்ட் பேனாவைக் கொண்டு எழுத வேண்டும்.
  • விடைத்தாளில் தவறான பதிவு எண், பாட குறியீடு போன்றவை பதிவு செய்யப்பட்டிருந்தால் விடைத்தாள்கள் நிராகரிக்கப்படும்.
  • வீடுகளில் பேனா-பேப்பர் முறையில் ஆப்லைன் தேர்வாக, 3 மணி நேரம் நடைபெறும்.
  • காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், பிற்பகலில் 2.30 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும்.
  • தேர்வு முடிந்ததும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளபடி, விடைத்தாள்களை பிடிஎப் முறையில் ஒரு மணி நேரத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • காலையில் தேர்வு நடைபெறும் பொழுது மாணவர்களுக்கான வினாத்தாள்கள் கல்லூரிகளுக்கு 9 மணி முதல் 9.30 மணிக்குள் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
  • தேர்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி 12.30 மணி வரை நடைபெறும்.
  • மாணவர்கள் விடைத்தாளை மதியம் 1.30 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • மதியம் தேர்வு நடைபெறும் பொழுது மாணவர்களுக்கான வினாத்தாள்கள் கல்லூரிகளுக்கு 2 மணி முதல் 2.30 மணிக்குள் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
  • தேர்வு மதியம் 2.30 மணிக்குத் தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும்.
  • மாணவர்கள் விடைத்தாளை மாலை 6.30 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • தேர்வுத் தாள்களை மாணவர்கள் நூலால் கட்டி, கவரில் போட்டு விரைவு தபால், பதிவுத்தபால் அல்லது கூரியர் மூலமாக அந்தந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் பெயரில், அன்றைக்கே அனுப்பி வைக்க வேண்டும்.
  • தேர்வுக்கு முன்னாக அந்தந்த கல்வி நிறுவனங்கள் வினாத்தாள்களை மின்னஞ்சல், கூகுள் கிளாஸ் ரூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் தேர்வு தொடங்கும் 30 நிமிடத்திற்கு முன்பு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • மாணவர்கள் ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் பதிலளிக்க வேண்டும். அது தவிர ஒவ்வொரு தாளின் மேல்புறத்தில் மாணவர்களின் பெயர், பாட குறியீடு, பாடத்தின் பெயர், பதிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
  • ஒவ்வொரு தாளின் கீழ்ப்பக்கத்திலும் தேர்வு தேதி, பக்க எண், கையொப்பம் ஆகியவையும் பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு விவகாரம்: விரைவில் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.