பொறியியல் படிப்புகளில் பி.இ. பி.டெக் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்தாண்டு பொறியியல் படிப்பில் சேர ஜூலை 15ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு நடைபெற்றது. அதில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர்.
அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 378 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். அவர்களுக்குச் சான்றிதழ்களைப் பதிவேற்ற ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி கால அவசாசம் அளிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 436 பேர் பதிவேற்றம் செய்திருந்தனர்.
ஆனால் மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்ற கூடுதல் அவகாசம் கேட்டு கோரிக்கைவைத்தனர். அதனால் சான்றிதழ்கள் பதிவேற்ற கால அவகாசம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
எனவே இன்றுடன் சான்றிதழ்களைப் பதிவேற்ற கால அவகாசம் முடிகிறது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு சான்றிதழ் பதிவேற்ற கால நீட்டிப்பு - உயர்கல்வித்துறை அமைச்சர்