ETV Bharat / city

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு - டி.டி.வி. தினகரன் பதிலளிக்க உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: டி.டி.வி. தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட 31 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்கக் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை மற்றும் டிடிவி தினகரன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

dinakaran
dinakaran
author img

By

Published : Mar 17, 2020, 6:18 PM IST

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், ” அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த 1998 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தினகரன் அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவை வாரியம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அவருக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன. அதன் பிறகும் 31 கோடி ரூபாய் அபராதத் தொகையை அவர் செலுத்தவில்லை. அபராதத் தொகையை வசூலிக்க, தற்போது வரை அமலாக்கத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக தகவல் பெறும் ஆணையத்திடம் அபராதத் தொகை பெறப்பட்டதா எனக் கேட்டு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தத் தொகையை அமலாக்கத்துறை வசூலிக்க உத்தரவிட வேண்டும் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்குவந்தபோது, இதுகுறித்து அமலாக்கத்துறை, டிடிவி., தினகரன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மக்களுக்கு பிரச்னை என்றால் அமைச்சரிடம் செல்லலாம், அமைச்சருக்கே பிரச்னை என்றால்? - துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.