ETV Bharat / city

ஏடிஎம் வழியாக அடிக்கடி ரூ.5 லட்சம் வரை பணப்பரிமாற்றம்: இளைஞரிடம் அமலாக்கத்துறை விசாரணை - வங்கி அளித்த தகவலில் இளைஞரிடம்

சென்னையில் ரூ.1000 கமிசஷனில் பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்-களிலிருந்து லட்சக்கணக்கில் பணம் அனுப்பியவரை கைது செய்த போலீசார் அமலாக்கத்துறையினரிடம், அவரை ஒப்படைத்த நிலையில், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 5, 2022, 10:31 PM IST

சென்னை மாநகரில் உள்ள SBI ஏடிஎம்-லிருந்து அடிக்கடி ரூ.2 லட்சத்திருந்து ரூ.5 லட்சம் வரையிலான பணம் டெபாசிட் செய்யப்படுவதாக SBI வங்கி அளித்த தகவலின் அடிப்படையில் மறைந்திருந்த கீழ்ப்பாக்கம் காவல் நிலைய போலீசார் சாயின்ஷா(29) என்பவரை கட்டுக்கட்டான பணத்துடன் கையும் களவுமாக கைது செய்து, அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கீழ்ப்பாக்கம் அழகப்பா சாலையிலுள்ள SBI வங்கி ஏடிஎம்-ல் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையிலான பணத்தை தினந்தோறும் ஒரு நபர் போடுவதாக மும்பையிலுள்ள SBI வங்கி தலைமை அலுவலகம் சார்பில், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளில் சரியாக 6 மணிக்கு தினந்தோறும் பணம் அனுப்பி வந்த நபர், ஒரே நபர் தான் என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு SBI வங்கி தலைமை அலுவலகம் தகவல் சொல்லியது.

இதன் அடிப்படையில் நேற்று (செப்.4) காலை 5.50 மணிக்கு அங்கு சென்று காத்திருந்த போலீசார் சரியாக 6 மணிக்கு ரூ.2.10 லட்சம் பணம் போட்டு வெளிவந்தவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சாயின்ஷா(29) என்பது தெரியவந்தது. மேலும், அவரின் கைப்பையில் ரூ.6 லட்சம் பணம் இருந்ததும் தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில் பாரிமுனையில் பர்வீஸ் என்பவர் தினமும் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, அவர் சொல்லும் வங்கி எண்ணுக்கு பணத்தை அனுப்ப சொல்லியதாகவும், அப்படி அனுப்பினால் ரூபாய் ஒரு லட்சத்துக்கு, ரூ.1000 என கமிஷன் கிடைக்கும் என்றும் சாயின்ஷா தெரிவித்துள்ளார்.

இதன்படியே பர்வீஸ் என்பவர் கொடுக்கும் பணத்தை பிரித்து கீழ்ப்பாக்கம், பெரியமேடு, செனாய் நகர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஏடிஎம் வழியில் பிரித்து அனுப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பிடிபட்ட சாயின்ஷா Rapido பைக் சர்வீஸில் பணிபுரிந்து வருவதாகவும், கடந்த ஓராண்டு காலமாக இதேபோல் பணத்தை அனுப்பி வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் அமலாக்கத்துறையினருக்குத் தகவல் தெரிவித்து சாயின்ஷாவை அவர்களிடம் ஒப்படைத்தனர். அமலாக்கத்துறையினர் சாயின்ஷாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது குறித்து பாரிமுனை பகுதியைச்சேர்ந்த பர்வீஸ் என்பவரை கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

இவ்வாறு ஏடிஎம் வழியாக அடிக்கடி பல லட்சம் ரூபாய்களை பரிமாற்றம் செய்து வந்தவரை, சென்னையில் போலீசார் கைது செய்து மேற்படி விசாரணைக்காக அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 106ஆவது பிறந்தநாள் கண்ட கிருஷ்ணம்மாள் பாட்டி... கிடா விருந்தளித்த பேரன், பேத்திகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.