சென்னை: அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வை எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் கூறப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் எனவும், விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 2.12.2021 (வியாழக் கிழமை) காலை 10.00 மணி முதல் 3.12.2021 (வெள்ளிக்கிழமை)
மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்குரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுனர் மகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை
11ஆம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் நாளை பதிவிறக்கம்
11ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைதாள் நகல் கேட்டு விண்ணப்பம் செய்தவர்கள் நாளை காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.