இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் தேர்தல் தேதிக்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக பரப்புரையில் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 3ஆம் தேதியிலிருந்து இருசக்கரப் பேரணி செல்ல தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இருசக்கர வாகன பேரணிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக இருந்த தடையை 72 மணி நேரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.