ETV Bharat / city

சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடளுமன்ற தேர்தல் - சுனில் அரோரா தகவல்

author img

By

Published : Feb 11, 2021, 4:27 PM IST

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்ந்து நடைபெறும். அரசியல் கட்சிகள் தேர்தலையொட்டி செய்யும் செலவினங்களை கண்காணிக்க இரண்டு சிறப்பு பார்வையாளர்கள் அமைக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

sunil arora
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

சென்னை: தமிழ்நாடு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்பட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் தொடர்பாக இரண்டாவது நாளாக அரசு அலுவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் 8 பேர் கொண்ட தேர்தல் அலுவலர்கள் குழு இரண்டு நாள் பயணமாக நேற்று (பிப். 10) தமிழ்நாடு வந்தனர்.

முதல் நாளில் அரசியல் கட்சி பிரமுகர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், டிஜிபி உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப். 11) ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர், டி.ஜி.பி, உள்துறை செயலாளர், வருமான வரித்துறை அலுவர்கள், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர்கள், கடலோர காவல் படையினர் உள்ளிட்ட அரசு நிறுவன அலுவலர்களுடனும், தேர்தல் ஒழுங்குப்படுத்தும் முகாமைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டம் முடிந்த பின் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைவரும் வாக்களிக்க வேண்டும்

தமிழ்நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று திறனாளிகள் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் கரோனா காலக்கட்டத்தில் தேர்தல் வர இருப்பதால், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்.

வாக்கு எண்ணிக்கை உடனடியாக சாத்தியமில்லை

அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரு கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். தேர்தல் நடந்து முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அது சாத்தியமில்லை. ஏனெனில் பல மாநிலங்களிலும் தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால் அதை செய்ய முடியாது.

வாக்களிக்கும் நேரம் நீட்டிப்பு

சில வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை ஈடுபடுத்தப்படுவர். கரோனா காலம் என்பதால் தகுந்த இடைவெளியை பின்பற்றி வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடிய வகையில் வாக்கு அளிக்கும் நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கூடுதல் வாக்குச்சாவடிகள்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 68 ஆயிரத்து 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் தகுந்த இடைவெளியுடன் வாக்களிப்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும். அதன்படி தமிழ்நாட்டில் தற்போது நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 93 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.

சென்னையில் இரண்டு சிறப்பு பார்வையாளர்கள் அமைக்கப்படுவார்கள். இவர்கள் அரசியல் கட்சிகள் தேர்தலையொட்டி செய்யும் செவவினங்கள் பற்றி கண்காணிப்பாளர்கள். நேர்மையான வெளிப்படையான முறையில் வரும் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்தார்.

கலால் வரி துறை செயல்பாடுகளில் அதிருப்தி

நடந்து முடிந்த தேர்தல்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக மத்திய, மாநில கலால் வரி துறை அலுவர்களின் செயல்பாடு எதிர்பார்த்த அளவில் இல்லை. தேர்தல் முறைகேடுகள் குறித்து ஓட்டுநர்கள், உணவக ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது.

தேர்தல் நாள் அறிவிப்பு

தமிழ் புத்தாண்டு மற்றும் பல விடுமுறைகள் ஏப்ரல் மாதம் இருக்கும் நிலையில், தேர்தல் நாள் பற்றி அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து அறிவிப்போம்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல், வரும் சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்ந்து நடைபெறும்.

தபால் வாக்குகளில் குளறுபடிகள்

80 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தபால் வாக்குகளில் குளறுபடிகள் ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பிகார் தேர்தலில் எந்த ஒரு பிரச்னையும் நடைபெறவில்லை. இருப்பினும் இதுகுறித்து ஆலோசனை செய்யப்படும்.

வாக்காளர்களுக்கு பணம் வழங்கினால் கடும் நடவடிக்கை

வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு கூடுதலாக இரண்டு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்ட தேர்தல் குறித்த விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையர் குழு புதுவை செல்கிறார்கள்.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.