சென்னை: கரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த புள்ளி விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (நவ.10) வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 833 பேருக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் புதிதாக 828 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 13 லட்சத்து 10 ஆயிரத்து 244 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 27 லட்சத்து 11 ஆயிரத்து 584 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 10 ஆயிரத்து 159 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 931 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 65ஆயிரத்து 178ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் மூன்று நோயாளிகளும் அரசு மருத்துமனையில் ஆறு நோயாளிகளும் என ஒன்பது நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 36ஆயிரத்து 247ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கரோனா தொற்றினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு விவரங்கள்
- சென்னை - 5,55,803
- கோயம்புத்தூர் - 2,47,822
- செங்கல்பட்டு - 1,72,576
- திருவள்ளூர் - 1,19,702
- ஈரோடு - 1,04,946
- சேலம் - 1,00,441
- திருப்பூர் - 96,050
- திருச்சிராப்பள்ளி - 77,866
- மதுரை - 75,321
- காஞ்சிபுரம் - 75,227
- தஞ்சாவூர் - 75,683
- கடலூர் - 64,234
- கன்னியாகுமரி - 62,550
- தூத்துக்குடி - 56,402
- திருவண்ணாமலை - 55,075
- நாமக்கல் - 52,665
- வேலூர் - 49,991
- திருநெல்வேலி - 49,477
- விருதுநகர் - 46,340
- விழுப்புரம் - 45,943
- தேனி - 43,590
- ராணிப்பேட்டை - 43,495
- கிருஷ்ணகிரி - 43,694
- திருவாரூர் - 41,645
- திண்டுக்கல் - 33,142
- நீலகிரி - 33,743
- கள்ளக்குறிச்சி - 31,449
- புதுக்கோட்டை - 30,248
- திருப்பத்தூர் - 29,349
- தென்காசி - 27,379
- தருமபுரி - 28,578
- கரூர் - 24,291
- மயிலாடுதுறை - 23,318
- ராமநாதபுரம் - 20,587
- நாகப்பட்டினம் - 21,168
- சிவகங்கை - 20,288
- அரியலூர் - 16,882
- பெரம்பலூர் - 12,083
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,028
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும்.. அமைச்சர் எ.வ.வேலு