ETV Bharat / city

சி.வி. சண்முகம் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால் அதற்கு திமுகதான் காரணம் - எடப்பாடி சீற்றம்

சி.வி. சண்முகத்திற்கு அளித்து வந்த காவல் துறை பாதுகாப்பை திமுக அரசு திடீரென்று வாபஸ் பெற்ற நிலையில், அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால் அதற்கு இந்த திமுக அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 8, 2021, 9:18 AM IST

எடப்பாடி சீற்றம்
எடப்பாடி சீற்றம்

சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த காவல் துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளருமான சி.வி. சண்முகம் அதிமுக சார்பில் 2006ஆம் ஆண்டு திண்டிவனம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, 2006ஆம் ஆண்டு மே மாதம் அரசியல் எதிரிகள் அவரது வீடு புகுந்து, அவர் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அத்தாக்குதலில் சண்முகம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும், அத்தாக்குதலில் அதிமுக தொண்டர் முருகானந்தம் கொலைசெய்யப்பட்டார். உடைமைகளுக்குச் சேதம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

24 மணிநேர பாதுகாப்பு

வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும், தவறு செய்தவர்களுக்குத் தக்க தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் சண்முகம் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி 2012ஆம் ஆண்டு முதல் சிபிஐ இவ்வழக்கை விசாரித்து வருகிறது. அச்சமயத்தில் அவரது பாதுகாப்பை ஆய்வு செய்த காவல் துறை, அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவர் தங்கியுள்ள இடத்தில் தாக்குதல் நடத்தப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்தது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கும், அவரது வீட்டிற்கும் 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்க முடிவு செய்தது.

உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை

அவர் வெளியே சென்றால் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பும், அவரது வீட்டிற்கு 24 மணி நேரக் காவலர்கள் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னும், கடந்த ஆறு மாதங்களாக அவருக்கும், அவரது வீட்டிற்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர்ந்தது.

தற்போது, சி.வி. சண்முகத்திற்கு அளிக்கப்பட்டு வந்த காவல் துறை பாதுகாப்பு திடீரென்று விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. நடந்து முடிந்த விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினரின் அராஜகத்தையும், அவர்களது தேர்தல் தில்லு முல்லுகளையும் துணிவுடன் எதிர்த்து நின்று அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முழு பாதுகாவலனாக சி.வி. சண்முகம் விளங்கினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் முதல் வழங்கப்பட்டு வந்த காவல் துறை பாதுகாப்பை இந்த திமுக அரசின் காவல் துறை திடீரென்று விலக்கிக்கொண்டதைப் பார்க்கும்போது ஏதோ உள்நோக்கத்துடன் இது நிகழ்ந்துள்ளதாகச் சந்தேகம் எழுகிறது.

திமுகதான் பொறுப்பு

மேலும், அதிமுக தொண்டர் முருகானந்தம் கொலை வழக்கு வரும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இந்த காவல் துறை பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்தான் நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் உள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு அளித்து வந்த காவல் துறை பாதுகாப்பை இந்த அரசு திடீரென்று வாபஸ் பெற்றதை அதிமுக சார்பில் நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்றால் அதற்கு இந்த திமுக அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்திற்கு நீண்ட காலமாக வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.