ETV Bharat / city

ஜெயலலிதாவின் பக்குவம் எடப்பாடியிடம் இல்லை! - பிரேமலதா தாக்கு!

சென்னை: ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்றும், முதலமைச்சர் வேட்பாளராக டிடிவி. தினகரனை ஏற்கிறோம் எனவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

dmdk
dmdk
author img

By

Published : Mar 15, 2021, 5:05 PM IST

Updated : Mar 15, 2021, 5:27 PM IST

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியில் இணைந்து 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. அது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, “2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது, கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால்தான் பிரச்சாரத்திற்கு செல்வேன் என ஜெயலலிதா பக்குவமாக நடந்து கொண்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் அந்தப் பக்குவம் இல்லை.

நாடாளுமன்ற தேர்தலில்கூட நாங்கள் விருப்பப்படாத தொகுதிகளைத் தான் அதிமுக வழங்கியது. இம்முறை அதிமுக தான் எங்களிடம் வந்தது. நாங்கள் செல்லவில்லை. அதிலும், மற்ற கட்சிகளை எல்லாம் முதலில் அழைத்துவிட்டு, எங்களை இறுதியாகவே அழைத்தார்கள். இருப்பினும் கூட்டணி தொடர வேண்டும் என மிகவும் பொறுமையாக இருந்தோம். இறுதியாக 18 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் கேட்டோம்.

ஆனால், 13 தொகுதிக்கு மேல் தர முடியாது. நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, செய்து கொள்ளுங்கள் என சுதீஷிடம் முதலமைச்சர் தெரிவித்து விட்டார். எனவே, கனத்த இதயத்துடன் கூட்டணியை விட்டு வெளியேறினோம்.

ஜெயலலிதாவின் பக்குவம் எடப்பாடியிடம் இல்லை! - பிரேமலதா தாக்கு!

விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் விரைவில் ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவார். நான் வரும் வெள்ளிக்கிழமை விருத்தாசலத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனை ஏற்கிறோம்"என்றார்.

இதையும் படிங்க: ’சிஏஏவை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்’ - எடப்பாடி பழனிசாமி

Last Updated : Mar 15, 2021, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.