சென்னை: சென்ற வாரம் மே 17 அன்று கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. கடந்த 2010- 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தின் போது கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து முறைகேடான வழிகளில் பணம் கிடைத்தது தொடர்பாக சிபிஐ சோதனை மேற்கொண்டதாக தெரிய வந்தது.
கார்த்தி சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது இல்லம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இதனிடையே, முறைகேடாக ரூ.50 லஞ்சம் பெற்றுக்கொண்டு சீன நாட்டினருக்கு விசா வாங்கி கொடுத்த விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறையினர் காரத்தி சிதம்பரத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் ப சிதம்பரத்தின் வீட்டிலிருந்து எந்த ஆதாரமும் கைப்பற்றப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:எத்தனை தடவைதான் சோதனை நடத்தவீங்க!- சிபிஐ சோதனையை கலாய்த்த கார்த்தி சிதம்பரம்!