ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - அற்புதம்மாள் நன்றி

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ.

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

author img

By

Published : May 19, 2021, 9:18 PM IST

Updated : May 19, 2021, 9:31 PM IST

விஜயகாந்துக்கு கரோனா தொற்று இல்லை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லையென்பது தெரியவந்துள்ளது.

சத்தமில்லாமல் வந்திறங்கிய 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்: சாதித்துக்காட்டியவர் இவரா?

மதுரை: தன்னுடைய வெளிநாடு வாழ் தமிழ் நண்பர்களின் உதவியோடு மதுரைக்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை தனிப்பட்ட முயற்சியில் கொண்டுவந்து சாதித்துக் காட்டியுள்ளார், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.

பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

’ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்ததற்கு நன்றி’ - அற்புதம்மாள்

”அறிவின் உடல்நிலை உணர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு, உடனே விடுப்பு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி” - அற்புதம்மாள்

'கரோனாவுக்கு போட்டியாக புதிய நோய்' - கொள்ளை நோயான மியூகோர்மைகோசிஸ்

கரோனாவை சமாளித்து குணமடைந்தவர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் மியூகோர்மைகோசிஸ் தொற்றின் பரவல் கரோனாவுக்கு போட்டியாக நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த நோயை கொள்ளை நோயாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

காஞ்சி பெரியவர்களின் கரோனா நிதி: 'நாளைய தலைமுறை நல்லா இருக்கட்டும்'

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் தங்களது சேமிப்பு பணமான தலா ஒரு லட்ச ரூபாயை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

'மாஸ்க் அணிய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடும் மருத்துவர்' - வைரலாகும் காணொலி

கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக மருத்துவரான சீனிவாஸ் கக்கலியா என்பவர், முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார்.

டவ்தே புயல்: தரைமட்டமான ஐந்து மாடி கட்டடம்

டவ்தே புயல் காரணமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜமல்பூர் பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக நேற்றே புயல் எச்சரிக்கை காரணமாக கட்டத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்திக்கும் அமெரிக்க அமைச்சர்

ஜோ பைடன் தலைமையிலான அரசு அமைந்த பின்னர் முதல்முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிலிங்கன், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை இம்மாதம் சந்திக்கவுள்ளார்.

தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு: நெட்டிசன்கள் பாராட்டில் ஸ்டைலிஷ் ஸ்டார்

ஹைதராபாத்: தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்பாடு செய்துள்ளார்.

Last Updated : May 19, 2021, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.