ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - கரோனா விதிமுறைகளை மீறிய 382 கடைகளுக்கு சீல்

ஈ டிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

author img

By

Published : May 19, 2021, 3:14 PM IST

வெறுமையாகும் மய்யம்: திருச்சி முருகானந்தம் விலகல்!

திருச்சி: அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகவும், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு முழுக்காரணம் கமல்ஹாசன் தான் என்றும் முருகானந்தம் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பாதிப்பில் தமிழ்நாடு முதலிடம்!

டெல்லி: கரோனா தொற்று பாதிப்பின் நேற்றைய நிலவரப்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த 72 ஆயிரம் கோவாக்சின்!

சென்னை: ஹைதராபாத்திலிருந்து 72 ஆயிரம் டோஸ் கோவாக்சின் கரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

கி.ரா.,வுக்கு அரசு மரியாதை: முதலமைச்சருக்கு வைகோ நன்றி!

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக மரியாதை செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டார். இதற்கு மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.

நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம் - விழிப்புணர்வு காணொலி வெளியிட்ட முதலமைச்சர்!

கரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு காணொலி வெளியிட்டுள்ளார்.

கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 382 கடைகளுக்கு சீல்!

சென்னை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 382 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

’’அரசு மரியாதை எங்கள் தாத்தாவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்’’ - கி.ரா.வின் பேத்தி அம்சா பேட்டி!!

’’தமிழ்நாடு அரசு அளிக்கும் அரசு மரியாதை எங்கள் தாத்தாவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்’’ - கி.ரா.வின் பேத்தி தெரிவித்துள்ளார்.

4ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில், பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

சுந்தரவனக் காடுகளை தாக்கும் 'யாஷ் புயல்'?

டவ்-தே புயல் குஜராத் மாநிலத்தில் தனது கோர தாண்டவத்தை ஆடி முடித்துவிட்டு சென்றிருக்கும் வேளையில், அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம் மாநிலத்தை 'யாஷ்' என்ற புதிய சூப்பர் புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரோனா விதிகளை மீறினால் அபராதம் கட்டாயம்: புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

புதுச்சேரி: அரசின் முழு ஊரடங்கை மீறி கடைகள், வணிக வளாகங்கள் திறந்திருந்தால் ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.