வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அப்பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சேலம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறையை அம்மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார்.
மேலும் முக்கிய செய்திகள்: இந்தியாவுடனான தபால் சேவை நிறுத்தம்! - பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
உண்மை என்றால், நிரூபித்துக் காட்டுங்கள்! இந்தியாவுக்கு பாக். வலியுறுத்தல்