ETV Bharat / city

தாம்பரத்தில் அரசு அலுவலகம், டாஸ்மார்க் பார் ஆன அவலம்.. நடவடிக்கை எடுக்கப்படுமா..? - தாம்பரம் மாநகராட்சி

பணிநேரத்தில் குடிபோதையில் தூய்மை பணியாளர்களைக் கடுமையான வார்த்தைகளால் பேசிவரும் பல்லாவரம் அலுவலக மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

நடவடிக்கை தேவை
நடவடிக்கை தேவை
author img

By

Published : Feb 6, 2022, 6:28 AM IST

செங்கல்பட்டு: தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருபவர் ராகவன். இவர் பணியில் இருக்கும்போதே மது அருந்திவிட்டு தூய்மை பணியாளர்களைக் கடுமையான வார்த்தைகளால் பேசுவதை வழக்கமாக வைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மேற்பார்வையாளரின் செயல்பாடுகள் குறித்து, மேல் அலுவலர்களிடம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கமாறு பாதிக்கப்பட்டவர்கள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

குடிபோதையில் உரையாடல்

இந்த நிலையில், வழக்கம் போல பல்லாவரம் அரசு அலுவலகத்தில் ராகவன் தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டு தலைக்குப் போதை ஏறும்வரை குடித்துவிட்டு டெங்கு பணியாளர் பெண்களிடம் தொலைபேசியில் உரையாடுகிறார்.
நடவடிக்கை தேவை

அதுமட்டுமில்லாமல் அலுவலகம் மேஜையில் மது பாட்டிலை வைத்துக்கொண்டு, மதுவை டம்ளரில் ஊற்றிக் கொண்டு ஜாலியாக குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகத்தை டாஸ்மார்க் பார் போல உபயோகித்து வரும் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ராமானுஜரே போற்றி! சமத்துவச் சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்த நரேந்திர மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.