ETV Bharat / city

ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு - பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

author img

By

Published : Dec 30, 2019, 2:18 PM IST

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆயிரத்து 747  ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்துவருகிறது.

tet
tet

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்கள் தகுதித் தேர்வை முடிக்க வேண்டும் என்பது விதியாகும். தமிழ்நாடு அரசு 2012ஆம் ஆண்டு முதல் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இச்சட்டத்தின்படி, 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்கள் தேர்வினை முடித்திருக்க வேண்டும். அவ்வாறு தகுதி பெறாதவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை பள்ளிக்கல்வித் துறை கடைசி வாய்ப்பாகக் கூறியிருந்தது.

இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 4 முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சுமார் ஆயிரத்து 747 ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனாலும் யாரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இதனையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரத்து 747 ஆசிரியர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக தனியாக தகுதித் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அந்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் இத்தேர்வில், கடந்த முறை பலர் தேர்ச்சி பெறாததற்கு உளவியல் பாடத்தை சரியாக எழுதாததுதான் காரணம் என்றும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் சரியாக பாடம் நடத்தாமல் இருப்பது இதற்கு முக்கியக் காரணம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் ஆசிரியர்கள் பறை இசையமைத்து கின்னஸ் சாதனை

Intro:1747 ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு
பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை Body:1747 ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு
பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சென்னை,

அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாதா 1747  ஆசிரியர்கள் சிறப்பு தகுதித் தேர்வு நடத்திட பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.

 அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்களாக பணியில்  உள்ளவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.   மத்திய அரசு இந்த சட்டத்தை கடந்த 2010 ம் ஆண்டு அமல்படுத்தியது. அதனை தொடர்ந்து கடந்த 2012 ம் ஆண்டு முதல் தமிழக அரசு அச்சட்டத்தை தமிழகத்தில்  நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 2010 ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு   அரசு மற்றும் அரசு  உதவிப்பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்கள்   தேர்வினை முடித்திருக்க வேண்டும். அவ்வாறு தகுதிப் பெறாதவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை பள்ளிக்கல்வித்துறை கடைசி வாய்பாக கூறியிருந்தது.
இந்த நிலையில் கடந்த 9 ஆண்டுகளில் 4 முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வருவதை பள்ளிக்கல்வித்துறை கண்டறிந்தது. அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனாலும் யாரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களின்  விவரங்களை கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 1747 ஆசிரியர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக தனியாக தகுதித் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 1747 ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வினை முடிகின்ற வகையில் தமிழ்நாடு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஆசிரியர்களுக்கு உளவியல் பாடத்தில் சிறப்பு பயிற்சி அளித்தால் மட்டுமே தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் இருந்து தகுதிப்பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என அரசாணை வெளியிட்டால் மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் சிறப்புத் தகுதித் தேர்வினை நடத்தும்.

கடந்த முறை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்ததற்கு காரணம் உளவியல் பாடத்தினை சரியாக எழுதவில்லை என்பதாக கூறப்படுகிறது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் சரியாக பாடம் நடத்தாமால் இருப்பது தான் இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.