ETV Bharat / city

3,800 டாலர்கள் பறிப்பு: ஈரானிய கொள்ளையர்கள் உள்பட 9 பேர் கைது - ஈரானிய கொள்ளையர்கள் உள்பட 9 பேர் கைது

மத்திய காவல் துறையினர் எனக் கூறி 3800 டாலரைப் பறித்துச் சென்ற ஈரானிய கொள்ளையர்கள் ஆறு பேர் உள்பட ஒன்பது நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

ஈரானிய கொள்ளையர்கள் உள்பட 9 பேர் கைது
ஈரானிய கொள்ளையர்கள் உள்பட 9 பேர் கைது
author img

By

Published : Jul 17, 2021, 5:36 PM IST

Updated : Jul 17, 2021, 7:15 PM IST

சென்னை: தங்களை மத்திய காவல் துறையினர் எனக்கூறிக்கொண்டு 3800 டாலரைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களை, 200 சிசிடிவி காட்சிகளைப் பின்தொடர்ந்து காவல் துறையினர் பிடித்துள்ளனர்.

சோமாலியா நாட்டைச் சேர்ந்த அலி அகமத் முகமத் (61) என்பவர் அந்நாட்டில் தனியார் பள்ளி முதல்வராக இருந்துவருகிறார். கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்காக சென்னை வந்த அவர் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கிவருகிறார்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக வழிகாட்டியான அப்துல் என்பவருடன் அலி நுங்கம்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு மாடல் பள்ளி சாலை கார்ப்பரேஷன் பள்ளி எதிரே நடந்துவந்தார்.

அப்போது அவ்வழியாக இரண்டு காரில் வந்த மூவர் வழிமறித்து மத்திய காவல் துறையினர் எனத் தங்களைக் கூறிக்கொண்டு சோதனை செய்ய வேண்டும் என பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து அலி தனது கைப்பையிலிருந்து ஆவணங்களோடு பர்சையும் எடுத்துள்ளார், கண் இமைக்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் அவரது பர்சில் வைத்திருந்த அமெரிக்க டாலர் 3800 (இந்திய மதிப்பில் ரூ.2,77,000) பணத்தைப் பறித்து தப்பியோடி உள்ளனர்.

இது தொடர்பாக அலி ஆயிரம் விளக்கு காவல் துறையினரிடம் புகார் அளித்தபோது அவர்கள் போலி காவலர்கள் எனத் தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து தேடிவந்தனர்.

சிசிடிவியில் பதிவான முக அடையாளங்கள் வட மாநிலத்தவர்போல் இருந்தது. இதே பாணியில் கொள்ளையடிக்கும் கும்பல் குறித்தான பழைய குற்றவாளியின் அடையாளங்களைத் தேடியுள்ளனர். சிசிடிவியில் பதிவான அடையாளங்களில் உள்ள நபர்கள் குறித்து அனைத்து விடுதி உரிமையாளர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதே பாணியில் கடந்த 10 நாள்களில் அசோக் நகர், விருகம்பாக்கம், கொளத்தூர், கே.கே. நகர் ஆகிய இடங்களிலும் காவல் துறையினர் எனக்கூறி கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியது.

இந்த நிலையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் கைவரிசை காட்டிவிட்டு காரில் கொள்ளையர்கள் சென்ற இடத்தை சுமார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பின்தொடர்ந்த காவல் துறையினர் இந்தக் கும்பல் கோவளத்தில் உள்ள ரிசார்டில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் நுங்கம்பாக்கம் தனிப்படை காவல் துறையினர் விரைந்து அறையில் பதுங்கியிருந்த மூன்று பெண்கள் உள்பட ஒன்பது பேரை கைதுசெய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கவனத்தை திசைதிருப்பி கொள்ளையடிக்கும் ஈரானிய கும்பல் எனத் தெரியவந்தது.

ஈரானிய நாட்டைச் சேர்ந்த சாபீர் (35), ரூஸ்தம்சைதி (28), ஷியவஸ் (26), பெக்ருஷா (35), டெல்லியைச் சேர்ந்த புருஷ் அலிபனா (56), பினியாமின் (19), இவர்களது மனைவிகளான நஷ்மின் (36), அப்ஸ் ஆனா (35), பாத்திமா ( 39) உள்பட ஒன்பது பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து 13 செல்போன் , ஈரான் பணம் ஐந்து லட்சம், அமெரிக்கா டாலர் 28, இந்தியப் பணம் 57 ஆயிரம் ரூபாய், இரண்டு கார் ஆகியவை காவல் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்டது.

இதே போல் சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. குறிப்பாக இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டவுடன் காரின் நம்பர் பிளேட்டை மாற்றுவது மட்டுமில்லாமல் செல்போனில் உள்ள சிம்கார்டுகளையும் தூக்கி எறிந்துவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னைவாசியாக மாறிய மதராஸி: அது நடந்தது இந்நாளே!

Last Updated : Jul 17, 2021, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.