இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் கூறியுள்ளதாவது, “இந்தியாவில் ஜனவரி மாத இறுதியிலிருந்து கரோனா வைரஸ் பரவி வருகிறது. அப்போது போதுமான பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை. அதிகளவில் பரிசோதனை செய்வதற்காக தமிழ்நாடு அரசு நேரடியாக ரேபிட் பரிசோதனைக் கருவிகளை வாங்குவதாக அறிவித்தது. ஆனால், அந்தக் கருவி சரியில்லை என்றும், எனவே அதனைக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்தது.
இந்நிலையில், அதிக விலைக் கொடுத்து தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள ரேபிட் பரிசோதனை கருவிகள் தரமற்றது என்றும், எனவே அதனை பயன்படுத்த வேண்டாமெனவும் ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. ஆகவே, தரமான ரேபிட் கிட் கருவிகளை உடனே வாங்கி, அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்“ என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் பகல் கொள்ளை - வெள்ளை அறிக்கை கேட்கும் டிடிவி தினகரன்!