ETV Bharat / city

'கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தெருக்களில் நின்று போராட தயார்' - மருத்துவர்கள் கூட்டமைப்பு - மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன்

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தெருக்களில் நின்று போராடவும் தயார் என, அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் கூட்டமைப்பு
author img

By

Published : Oct 30, 2019, 3:04 PM IST

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் ஏற்கனவே இருந்த 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் இந்தக் காலவரையரையற்றப் போராட்டம், கடந்த 25ஆம் தேதி தொடங்கி ஆறாவது நாளாக தொடர்கிறது.

இதனிடையே சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஐந்து மருத்துவர்கள் ஆறாவது நாளாக சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களில் மூன்றுபேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது மேலும் மூன்று மருத்துவர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன்,

doctors protest

பட்டினிப் போராட்டத்துக்கு எந்தவித அரசியல் தலையீடோ, உள் நோக்கமோ கிடையாது. தங்களின் வேதனையின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம் எனவும், அடிப்படை ஊதியத்தில் பிற மாநில மருத்துவர்களைவிட 50 ஆயிரம் ரூபாய் குறைவாக பெறுவதாகவும் தெரிவித்தார்.

மருத்துவர்கள் போராடுவது சரியில்லை எனக்கூறிவிட்டு மற்றொரு சங்கத்தை அழைத்துப் பேசுவது என்பது உண்மைக்குப் புறம்பானது என்ற அவர், அரசு அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக விளக்கம் அளித்தார். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தெருக்களில் நின்று போராடவும் தயார் எனவும் லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.

மேலும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தெருக்களில் நின்று போராடவும் தயார் என, லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.

Intro:தெருக்களில் நின்று போராடவும் தயார்
அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு

Body:தெருக்களில் நின்று போராடவும் தயார்
அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு
சென்னை,
கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தெருக்களில் நின்று போராடவும் தயாராக உள்ளதாக அனைத்து அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 25 ந் தேதி முதல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் மற்றும் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பெற்ற 5 மருத்துவர்களில் மூன்று மருத்துவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் இந்த நிலையில் மேலும் மூன்று மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தன்னை மட்டும் அழைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றதாக நேற்று நள்ளிரவில் அறிவித்தார்.

ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பினர் நேற்று வரை தங்களுக்கு எந்தவித பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் வரவில்லை என்பதை தெளிவாக கூறியதுடன் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்திருந்தனர்.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனாலும் பறையும் பொருட்படுத்தாமல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் முன்பு தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும், போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழையிலும் குடைபிடித்து மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், ஆறாவது நாளாக நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி எங்களை அழைத்துப் பேசி எங்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப்பூர்வமாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எழுதிக் கொடுத்தனர்.அப்பொழுது ஒப்புக்கொண்டு இன்று மறுக்கின்றனர்.

அரசு மருத்துவர்களுக்கு சம்பள உயர்விற்கு 2009ம் ஆண்டு போடப்பட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு, அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை போன்றவை இருக்கின்றன. அதன் அடிப்படையில் 12 ஆண்டுகளில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

அன்று எங்களை அழைத்துப் பேசும் போது நாங்கள் பதிவு பெற்ற சங்கமாகவும், எங்கள் கோரிக்கையை நியாயமானதாகவும் தெரிந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சாகும் வரை உண்ணாவிரதம் 5 பதிவுபெற்ற சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து தமிழக சுகாதாரத் துறையில் சிறப்புத் தன்மையை காப்பதற்காக முதலமைச்சர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்த போராட்டத்திற்கு எந்தவித அரசியல் சாயமோ, உள் நோக்கமோ கிடையாது. எங்களின் வேதனையின் வெளிப்பாடு தான் இந்த போராட்டம். பணிச்சுமை காரணமாக நிலைய மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியமாக 13 ஆண்டுகள் கழித்த பின்னர் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பிற மாநிலத்தில் பணிபுரியும் மருத்துவர்களை விட 50, 000 அடிப்படை ஊதியத்தில் குறைவாக பெறுகிறோம் என்பது தான் வேதனையான விஷயம்.

மருத்துவர்கள் போராடுவது சரியில்லை எனக் கூறி விட்டு மற்றொரு சங்கத்தை அழைத்துப் பேசுவது என்பது உண்மைக்குப் புறம்பானதாக உள்ளது. அதேபோல் அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு அனுமதி வாங்க வில்லை என்பதும் தவறான தகவலாகும். நாங்கள் அரசு அதிகாரிகள் அரசிடம் ஏற்கனவே கூறி விட்டுதான் போராட்டத்தை நடத்துகிறோம்.
அரசு அனுமதி இல்லை என எங்களை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறினாலும் நாங்கள் கொட்டும் மழையிலும் சாலையில் நின்று போராடுவதற்கு தயாராக உள்ளோம்.

எங்களுக்காக இல்லாவிட்டாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 17 ஆயிரத்து 800 மருத்துவர்களின் சார்பாக எங்களை அழைத்துப் பேச வேண்டும்.
எங்களின் கோரிக்கையை நிறைவேற்று வதற்காக போராட்டம் தொடரும் அதே நேரத்தில் எந்த இடத்தில் போராட்டம் நடத்தி வரும் என்பது குறித்தும் எங்களுக்கு கவலை இல்லை. அரசு அனுமதிக்காவிட்டால் தெருக்களில் என்றும் போராட்டத்தினை தொடர்வதற்கு நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேசி சுகாதாரத்துறை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.