ETV Bharat / city

ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்! - தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்கம்

ஸ்டான்லி மருத்துவமனையில் நீட் தேர்வு முதுகலை கவுன்சிலிங்கை உடனடியாக நடத்தக்கோரியும், பணிச்சுமையை குறைக்கக்கூறியும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டான்லி மருத்துவமனை
ஸ்டான்லி மருத்துவமனை
author img

By

Published : Dec 1, 2021, 11:08 PM IST

Updated : Dec 2, 2021, 1:03 PM IST

சென்னை: இந்தியா முழுவதும் நீட் தேர்வு முதுகலை கவுன்சிலிங்கை உடனடியாக நடத்தக்கோரியும், தற்போது பணியில் இருக்கும் மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைக்கக்கோரியும் அகில இந்திய உறைவிட மருத்துவர்கள் சங்கத்தினர் கடந்த 5 நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்களின் தர்ணா போராட்டம்

இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் 150-ற்கும் மேற்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் நீட் தேர்வு முதுகலை கவுன்சிலிங்கை நடத்தக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் தர்ணா போராட்டம்

இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதுநிலை மருத்துவர் மோகனவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்கம் சார்பாக, நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்தியா முழுவதும் கடந்த 5 நாட்களாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படிப்பவர்கள் 3ஆம் ஆண்டு முடித்து வெளியே சென்றுவிடுவார்கள்.

தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படாமல் உள்ளது. கடந்த ஜனவரியில் நடக்க வேண்டிய நீட் தேர்வு செப்டம்பரில் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்தும் இன்னும் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. பொதுவாக 100 மருத்துவர்கள் பணியாற்றும் மருத்துவமனையில் நாங்கள் 60 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறோம். இரண்டு மருத்துவர்கள் இருக்கக் கூடிய வார்டில் ஒருவர் மட்டுமே இருந்து வருகிறோம்.

மருத்துவர்களின் மன உளைச்சல்

இதனால் அளவுக்கு அதிகமான பணிச்சுமை எங்களுக்கு உள்ளது. மேலும் தொடர்ந்து நாங்கள் இதேநிலையில் பணியாற்றி வருவதால் பணிச்சுமை அதிகமாகி மன உளைச்சல் ஏற்பட்டு நோயாளிகளுக்குத் தேவையான சரியான மருத்துவத்தைத் தர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஒரு நல்ல மருத்துவரின் தரம் கூட குறைவாகத் தான் வெளிப்படுகிறது. எனவே முதுகலை படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கவுன்சிலங்கை உடனடியாக நடத்த வேண்டும் என நாங்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம்.

மேலும் எங்களுக்குத் தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய உறைவிட மருத்துவர்கள் சங்கத்திலிருந்து அறிவிப்பு வரும் வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவோம்' என தெரிவித்தார். ஸ்டான்லி மருத்துவர்களின் இந்த திடீர் தர்ணா போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Last Updated : Dec 2, 2021, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.