ETV Bharat / city

கரோனா தொற்றால் அதிகரிக்கும் இறப்புகளில் தப்பிப்பது எப்படி? - விளக்கும் மருத்துவர் அனந்த குமார்!

கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அதிகரிக்கும் இறப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தொற்றுக்கு ஆளானவர்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து விளக்குகிறார் மருத்துவர் அனந்த குமார்.

Dr. Ananthakumar
மருத்துவர் அனந்தகுமார்
author img

By

Published : May 25, 2021, 3:15 PM IST

கரோனா தொற்றின் முதல் அலையைவிட இரண்டாவது அலையில், இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள் ஆக்ஸிஜன் போன்ற சிகிச்சை முறைகளை அளித்தாலும், தீவிர நோயினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது என்பது முடியாத நிலையில் தான் இருக்கிறது. முதல் அலையின் போது கடந்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி கரோனா தொற்றினால் 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 474 ஆகவும், முதல் அலையில் ஒரு ஆண்டில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 16 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டும் இருந்தனர். நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கை ஐந்து என்ற நிலையில் இருந்தது. தமிழ்நாட்டில் முதல் அலையில் 12,501 நபர்கள் மட்டுமே இறந்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 4009 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வந்தனர்.

ஆனால், அதன் பின்னர் தொடங்கிய இரண்டாவது அலையில் கரோனா தொற்று தாக்கத்தின் வேகம் அதிகமாக இருக்கிறது. மேலும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது. மே மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி, கரோனா தொற்று பாதிப்பு புதியதாக 35,483 நபர்களுக்கு கண்டறியப்படுகிறது. அவர்களில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 143 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிகிச்சைப் பலனின்றி 422 பேர் இறந்துள்ளனர். இதுவரை 20 ஆயிரத்து 468 பேர் இறந்துள்ளனர். இரண்டாவது அலையில் 7,967 சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவர் அனந்தகுமார்

இந்த நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தநிலையில் சிகிச்சை தொடங்க வேண்டும் என்பது குறித்தும், இறப்பினை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சென்னை பன்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அலுவலர் அனந்த குமார் கூறும் தகவல்களைக் காணலாம்.

கரோனா தொற்று இரண்டாவது அலையில் உருமாறிய நிலைக் காரணமாக, நுரையீரல் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அதிகளவில் இறப்பதைப் பார்க்கிறோம். நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசும் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகரித்து வருவதுடன், பரிசோதனைகளையும் அதிகரித்து வருகிறது. கரோனா இறப்பைத் தவிர்ப்பதற்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்துகொள்வதில் தயக்கம் காண்பிக்கின்றனர். குறிப்பாக அவர்கள் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனைக்கு வருவதில்லை. இந்த நேரத்தில் நோயின் தாக்கம் தீவிரமடைவதைப் பார்கிறோம்.

அடுத்தகட்டமாக பரிசோதனை செய்தபின்னர் வீட்டில் இருந்தும் சிகிச்சைப் பெறுகின்றனர். மேலும் இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் தகுதி இருந்தும் தடுப்பூசி போடாமல் இருப்பதாலும், குறிப்பாக கிராமப்புறங்களில் வயதானவர்கள் தடுப்பூசியைப் போடாமல் இருப்பதாலும் நோய்த்தொற்று ஏற்படும்போது அதிக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி அவர்களும் இறப்பதைப் பார்க்கிறோம்.

18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று அறிகுறிகளான ஜூரம், தொண்டை வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அரசு அனைத்து இடங்களிலும் இலவசமாகவே இப்பரிசோதனையை வழங்கி வருகிறது. கோவிட் தொற்று என்பது வெளியில் சொல்லக்கூடாத நோய் அல்ல. கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்தால், அவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்து, இறப்பையும் தடுக்க முடியும். எனவே, மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆரம்பநிலையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு, நன்றாக உள்ளவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தாலும், அவர்களும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சாதாரண ஜூரம், தொண்டை வலி, லேசான அறிகுறி உள்ளவர்களுக்குச் சாதாரண மருந்து மாத்திரைகளை அளிக்கலாம்.

வீட்டில் இருந்தாலும் சிலருக்குக் கரோனா தாெற்றுக்கான அறிகுறிகளுடன் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும். அவர்களுக்கு மேலும் சிடி ஸ்கேன் , ரத்தப் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவது என்பது பல்ஸ் ஆக்சி மீட்டரில் நுரையீரலில் 70 சதவீதம் பாதிப்பு ஏற்படும் போது தான் தெரியவரும். இது போன்ற தொற்று ஏற்படுவதை ரத்தப்பரிசோதனை மூலமாகவே தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரையின்படி சிகிச்சை அளித்தால், எட்டு நாட்களுக்குப் பின்னர் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும், ஆக்ஸிஜன் படுக்கை தேவைப்படும் என்ற நிலையையும் தவிர்க்க முடியும். வீட்டில் சிறப்பான சிகிச்சை வழங்கினால் அதற்கு அடுத்த நிலையான ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலைக்கு அதிகளவில் செல்லாமல், சிலர் மட்டுமே செல்லும் நிலையை உருவாக்க முடியும்.

சென்னை பெருநகர மாநாகராட்சி இதற்காகப் பணியாளர்களை நியமனம் செய்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். மாவட்டங்களிலும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். எனவே, பொது மக்கள் அரசு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றும், அரசின் கரோனா ஆலோசனை மற்றும் தடுப்பு எண்ணில் தொடர்பு கொண்டும் சிகிச்சைப் பெறலாம். மேலும் 104 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு சிகிச்சை மேற்கொள்ளலாம். கரோனா சிகிச்சையை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் தாமாக முன்வர வேண்டும்.

இதுகுறித்து மருத்துவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவரளித்த பதில்களும்;

கேள்வி: முதல் அலையில் இறப்பு எண்ணிக்கை 5 வரை குறைத்தோம். தற்பொழுது 440 வரை இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனைக் குறைக்க என்ன செய்யலாம்?

இறப்பு எண்ணிக்கை நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு ஏற்ப அதிகரித்து வருகிறது. அரசினைப் பொறுத்தவரையில் ஒரு இறப்பு கூட இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டினை எடுத்து செயல்பட்டு வந்தோம். இறப்பினை தவிர்ப்பதற்கு கரோனா அறிகுறிகள் தெரிந்த உடன் அவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொள்வதுடன், தனக்கு அறிகுறிகள் இருப்பதை மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

பரிசோதனை முடிவுகள் வரும் வரை மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் , முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டில் உள்ள மற்றவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தவுடன் மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் தொற்றை முன்கூட்டியே கண்டறிந்தால் பெரிய அளவில் ஆக்ஸிஜன் தேவை போன்றவை ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.

கேள்வி: கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் வேகத்தை குறைப்பதற்கு அரசு மற்றும் மக்கள் செய்யவேண்டியது என்ன?

கரோனா வைரஸ் அதிகப்படியான வேகத்தில் பரவி வருகிறது. இளம் வயதினர், கர்ப்பிணிகள், குழந்தைகள் போன்றவர்களையும் உருமாறிய கரோனா பாதிக்கிறது. இந்த வைரஸ் மேலும் வேகமாகப் பாதிக்குமா? என்பதையும் கூற முடியாது. ஆனால், ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் நோயினைக் குணப்படுத்தமுடியும். ஆனால், நோய் தீவிரம் அடைந்து நுரையீரலில் பாதிப்பு அதிகரிக்கும்போது, அவர்களை குணப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

கேள்வி: ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தவர்களுக்கு, சிடி ஸ்கேன் எடுக்கும் போது நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. தேவையான அளவிற்கு சிடி எடுக்கும் வசதிகள் உள்ளதா?

ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து முடிவுகள் வருவதற்கு ஒரு நாட்கள் ஆகிறது என்றாலும், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சிடி ஸ்கேன் 24 மணி நேரமும் எடுக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் முடிவுகளும் உடனடியாக அளிக்கப்படுகிறது. ஆர்டிபிசிஆர் முடிவுகள் நெகட்டிவ் வரும்போதோ அல்லது முடிவிற்காக காத்திருக்கும் போதா, சிடி ஸ்கேன் தேவைப்படுகிறது. நுரையீரலில் காணப்படும் அனைத்து தொற்றுகளும் தற்பொழுதைய சூழ்நிலையில் கரோனா என்பதை முடிவுகளின்படி அறியமுடியும். தொற்றைக் கண்டறிந்து பெரும்பாலானவர்களை குணப்படுத்தி உள்ளோம் என்பது வரலாறு.

தமிழ்நாட்டில் அதிகளவில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு விரைந்து சிகிச்சை அளித்து வருகிறோம். தமிழ்நாடு மருத்துவப்பணிகள் சேவைக்கழகத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிடி ஸ்கேன் பரிசோதனைகளை டெலிமெடிசின் மூலம் பார்த்து உறுதி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைக் கண்டறிவதற்கு தொண்டை சளி மாதிரி மூலம் ஆர்டிபிசிஆர் மூலம் கண்டறிவதுதான் அரசின் வழிமுறைகயாக இருந்து வருகிறது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தபின்னர், சிடி ஸ்கேன் எடுத்து அதன் முடிவினை மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் தான் மேற்கொள்ள வேண்டும்.

கரோனா முதல் அலையில் எட்டு நாட்களுக்கு பின்னர் தான் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த அலையில் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதைக் காண முடிகிறது. சிடி ஸ்கேன் எடுப்பதன் மூலம் தீவிர சிகிச்சைக்கு செல்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சிடி ஸ்கேன் என்பது கூடுதலாக கரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது தேவையா? என்பதை மருத்துவர்கள் தான் கூற வேண்டும் என மருத்துவர் அனந்தகுமார் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.