ETV Bharat / city

'கஸ்டடி மரணங்களை மறைத்து தமிழ்நாடு காவல்துறையின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்' - ஸ்டாலின்

author img

By

Published : Nov 7, 2020, 3:23 PM IST

சென்னை: அதிமுக ஆட்சியில் காவல் நிலையங்களில் நடக்கும் “கஸ்டடி மரணங்களை” வழக்கம் போல் மறைத்து, எஞ்சியிரும் தமிழ்நாடு காவல்துறையின் பெருமையை சீர்குலைத்து விட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Stalin statement
Stalin statement

இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 7) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர், நெய்வேலி நகர காவல் நிலைய அலுவலர்களின் சித்ரவதைக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை கொலைக்குப் பிறகு உயர் நீதிமன்றம் எச்சரித்தும், தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் “கைது நடவடிக்கைகள்” குறித்து சுற்றறிக்கை அனுப்பியும் இதுபோன்ற காவலர்களின் ‘டார்ச்சரும்’, அதனால் ‘கஸ்டடி’ மரணங்களும் தொடருவது கடும் கண்டனத்துக்குரியது.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல்துறை சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தடுமாறுகிறது என்பதற்கு ஒரு சில காவல் நிலையங்களில் இதுபோன்று நடக்கும் சம்பவங்கள் வேதனையளிக்கின்றன. கடலூர் செல்வமுருகன் மரணத்தை பொறுத்தமட்டில், அவரது மனைவியிடம் “உன் கணவர் மீது உள்ள திருட்டு வழக்குகளை எல்லாம் போட்டு விடுவோம்” என்று எச்சரிக்கப்பட்டதும் “கணவனை காணவில்லை” என்று மனைவி பிரேமா கொடுத்த புகாரை பெறாமல் வடலூர், நெய்வேலி நகர காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் இதயமற்ற முறையில் அலைகழித்தது மனித உரிமைகளை மீறும் செயலாகும்.

ஒருவர் புகார் கொடுத்தால் காவல் நிலைய எல்லை குறித்து கவலைப்படாமல், அந்த புகாரை பெற்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை எச்சரித்தும், ஒரு சில காவல் நிலையங்களில் இதை கடைபிடிப்பதில்லை.

கடலூர் செல்வமுருகன் வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது உண்மையான வழக்குக்காகவா? அல்லது சாத்தான்குளம் காவல் நிலையம் போல் பொய் புகாரிலா?. விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட செல்வமுருகன் ஏன் மிருகத்தனமாக தாக்கப்பட்டார்?. மனித உரிமைகளுக்கு எதிராக செல்வமுருகனின் உயிர் போகும் அளவுக்கு கொடுமையாக தாக்கப்பட்டவர்கள் ஏன் தற்போது வரை கைது செய்யப்படவில்லை?.

காவல் நிலையத்தில் மரணம் என்பதை மறைக்க காயங்களுடன் சிறைச்சாலையில் செல்வமுருகன் அடைக்கப்பட்டது எப்படி?, அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.