ETV Bharat / city

அதிமுகவிற்கு மக்கள் தந்த பதில் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி - உதயநிதி ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தோல்வி மூலம் அதிமுகவிற்கு மக்கள் தக்க பதிலளித்துள்ளதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

youth wing
youth wing
author img

By

Published : Jan 4, 2020, 1:26 PM IST

Updated : Jan 4, 2020, 2:05 PM IST

திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், அடுத்தாண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தின் தொடக்கத்தில் 12 தீர்மானங்களை உதயநிதி ஸ்டாலின் வாசிக்க ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சுஜித், பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ, ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமா லத்தீப் ஆகியோரது மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய அரசு, ஆதரவளித்த அதிமுக, பாமக கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுத் தெரிவித்தும், உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், வெற்றிக்கு உழைத்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்தும் மேலும், அத்திட்டதைக் கைவிட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு கண்டனம்

கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ’மு.க. ஸ்டாலினின் ஆணைக்கிணங்க இளைஞரணியில் புதிதாக ஐம்பது லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை திமுக தொடர்ந்து போராடும். உள்ளாட்சித் தேர்தல் தோல்வி மூலம் அதிமுகவிற்கு மக்கள் தக்க பதிலளித்துள்ளனர். இதற்குப் பிறகு நகர்புற உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. மக்களின் மனநிலைக்கேற்ப விரைவில் திமுக ஆட்சியில் அமரும் “ என்றார்.

மக்களின் மனநிலைப்படி விரைவில் திமுக ஆட்சியில் அமரும் - உதயநிதி

இதையும் படிங்க: தலைநகரை அதிர வைத்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Intro:Body:திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் ஆலோசனை கூட்டம் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞர் அணி துணை செயலாளர்கள் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ், எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர், தயாகம் கவி, சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் சட்ட மன்ற தேர்தல் 2021 பணிகள், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கூட்டத்தின் தொடக்கத்தில் மொத்தம் 12 தீர்மானங்களை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாசிக்க ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித்திற்கும், பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ மரணத்திற்கும், ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா லத்தீப் மறைவிற்கும் திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுக நிர்வாகிகள் மரணத்திற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல் குடியுரிமை சட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு, அதிமுக, பாமக கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், உழைத்த திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கும், 5 ஆம் மாற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தும் திட்டத்திற்கும் கண்டனம் தெரிவித்தது அதை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Conclusion:
Last Updated : Jan 4, 2020, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.