ETV Bharat / city

எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்த வழக்கு குறித்து ஆர்.எஸ்.பாரதி விளக்கம் - சென்னை மாவட்ட செய்திகள்

எடப்பாடி பழனிசாமி நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் குறித்து சிபிஐதான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை, நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
author img

By

Published : Aug 3, 2022, 3:31 PM IST

Updated : Aug 3, 2022, 3:50 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "திமுக சார்பில் 2018ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நிர்வாகத்தில் பல்வேறு ஊழல்கள் குறித்து வழக்கு தொடரப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையில் 4,800 கோடி ஊழல் நடைபெற்றதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தோம். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் அவருடைய உறவினர்களுக்கு வழங்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் 2 உறவினர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ விசாரணைக்கு ரத்து என உத்தரவு பெறப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. உச்ச நீதிமன்றத்தில் எங்கள் வாதம் ஏற்கப்பட்டுள்ளது. திமுக யார் மீதும் பொய் வழக்கு போடுவதில்லை, நியாயமாக வழக்கு நடத்தி வெல்வோம். நாங்கள் கேட்பது உண்மையான விசாரணை மட்டுமே. சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.

தற்போது எடப்பாடி பழனிசாமி வழக்கு வந்துள்ளது, அடுத்து வேலுமணி வழக்கு வரவுள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் சிறை செல்ல வேண்டியவர்கள் செல்வார்கள். அடுத்தது கொடநாடு போன்ற வழக்குகள் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நான் எந்த வழக்கையும் தொடுக்கவில்லை. இந்த வழக்கு திமுக எதிர்கட்சியாக இருந்தபோது தொடர்ந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது என்றும் நியாயமான விசாரணை நடைபெற்று நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

திமுக மீது புகார் தெரிவிப்பவர்களுக்கு சாவல் விடுகிறேன், முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். பாஸ்போர்ட் வழக்கில் அண்ணாமலையை பாரட்டிய அதே நீதிபதி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது தவறு இல்லை என கூறியுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நேரு விளையாட்டு அரங்கில் காவலர் தற்கொலை

Last Updated : Aug 3, 2022, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.